- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் நடித்த ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆவது எப்போது? - திருச்செந்தூரில் முக்கிய தகவலை சொன்ன...

விஜய் நடித்த ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆவது எப்போது? – திருச்செந்தூரில் முக்கிய தகவலை சொன்ன படத்தின் தயாரிப்பாளர்!

- Advertisement -

நடிகர் விஜய் கடைசியாக நடித்த படம் ஜனநாயகன். கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட இந்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை. தமிழக முதல்வராக விஜய் ஆன பிறகும் இன்னும் இந்த படம் ரிலீஸ் குறித்த பதில் இல்லை. இதனால் விஜய் ரசிகர்கள் பலத்த ஏமாற்றத்தில் இருந்து வருகின்றனர்.

இந்த படத்தின் சென்சார் சான்றிதழ் இன்னும் படத்தின் தயாரிப்பு நிறுவனத்துக்கு வழங்கப்படவில்லை. கடந்த மார்ச் மாதம் 15ம் தேதியே சென்சார் அதிகாரிகள் மும்பையில் ஜனநாயகன் படத்தை பார்த்து விட்டனர். ஆனால் இன்னும் படத்துக்கு சான்றிதழ் தராமல் இழுத்தடித்து வருகின்றனர். இடையில் சட்டசபை தேர்தல் நடந்ததும் ஒரு காரணமாகி விட்டது.

- Advertisement -

இந்த நிலையில் ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர் கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த வெங்கட் கே நாராயணா இன்று திருச்செந்தூர் வந்திருந்தார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அவர் சுவாமி தரிசனம் செய்தார். பிறகு செய்தியாளர்களிடம் அவர் ஜனநாயகன் படம் குறித்து பேசினார்.

அப்போது தயாரிப்பாளர் வெங்கட் கே நாராயணா கூறியதாவது, முதல் முறையாக திருச்செந்தூர் கோவிலுக்கு நான் வந்துள்ளேன். முருகன் தரிசனம் சிறப்பாக அமைந்தது. ஜனநாயகன் படம் பெரிய வெற்றியைப் பெற இங்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. படத்தின் தலைப்பு ஜனநாயகன். இப்போது விஜய் தமிழகத்தின் ஜனநாயகனாக முதல்வராக மாறிவிட்டார் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதற்காகவும் இங்கு வந்தேன்.

- Advertisement -

ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைத்ததும் படத்தின் ரிலீஸ் தேதி முறையாக அறிவிக்கப்படும். வருகிற ஜூன் 22ம் தேதி முதல்வர் விஜயின் பிறந்தநாள். அதற்குள் ஒரு தேதியை முடிவு செய்து படம் ரிலீஸ் செய்யப்படும். ஜனநாயகன் படத்தின் டைட்டிலில் முதல்வர் விஜய் என்ற வாசகம் இடம் பெறுமா என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர் வெங்கட் கே நாராயணா அப்போது கூறினார்.

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் ஏற்கனவே இணையத்தில் கசிந்து விட்டது. இதுகுறித்து 9 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த படத்தை ஒரு தரப்பினர் பார்த்தும் விட்டனர். மேலும் கருமத்தம்பட்டியில் உள்ள ஒரு லோக்கல் கேபிள் டிவியில் இந்த படத்தை ஒளிபரப்பும் செய்துவிட்டனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட லோக்கல் கேபிள் டிவி ஆபரேட்டரும் கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்