- Advertisement -
சில ஆண்டுகளுக்கு முன்பு இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவா ஒரு நேர்காணலில் கூறியதாவது, கல்யாணமான மறுநாளே யாராவது மனைவியை அடிப்பாங்களா? ஆனா நான் அடிச்சேன். ஏன்னா நான் குடிசை வீட்டில் இருந்தாலும் என்கிட்ட ஒரு ஆர்மோனியம் பெட்டி இருக்கும். அதுல எம்எஸ் விஸ்வநாதன் அண்ணன் போட்டோவை ஒட்டி வைத்திருப்பேன். அதை தினமும் கும்பிடுவேன். கல்யாணம் ஆகி வந்த ரெண்டாவது நாள் என் மனைவி வீட்டை கூட்டும் போது விளக்குமாத்தால் ஆர்மோனியம் பெட்டியை தொடச்சாங்க. அதை பார்த்த உடனே தாங்க முடியாம ஒரே அறை. அந்த அளவுக்கு விஸ்வநாதன் மேல் எனக்கு பக்தி என்று தேவா நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.





