- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனநாயகன் படம் ரிலீஸ் எப்போது? தேர்தலால் வந்த திடீர் சிக்கல் - தலைமை தேர்தல் அதிகாரியின்...

ஜனநாயகன் படம் ரிலீஸ் எப்போது? தேர்தலால் வந்த திடீர் சிக்கல் – தலைமை தேர்தல் அதிகாரியின் பதிலால் நொந்து போன தளபதி ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்தின் மறு தணிக்கை மும்பையில் நடந்து முடிந்த நிலையில் ரிலீஸ் செய்ய படம் தயாராக உள்ளது. ஆனால் இப்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக படம் வெளியாவதில் புதிய நடைமுறை சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் ஜனநாயகன் ரிலீஸ் தேதியை அறிவிப்பதில் மீண்டும் நெருக்கடி நிலை உருவாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் 33 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்த நடிகர் விஜயின் கடைசி படம் ஜனநாயகன். இந்த படம் கடந்த ஜனவரி 9ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் சென்சார் பிரச்னை காரணமாக தாமதம் ஏற்பட்டு ஜனநாயகன் படம் ரிலீஸ் தள்ளிப் போனது.

- Advertisement -

பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு ஒரு வழியாக 2 தினங்களுக்கு முன்பு மும்பையில் படம் மறுதணிக்கை செய்த நிலையில் இப்போது ஜனநாயகன் படம் திரைக்கு வர தயாராக உள்ளது. ஆனால் இப்போது அதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இப்போது சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது.

இந்த சூழலில் அரசியல் கட்சி தலைவராகவும் வேட்பாளராகவும் உள்ளவரது படத்தை வெளியிட அனுமதி கிடைக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியதாவது, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் போது வேட்பாளராக இருக்கும் நடிகரின் படத்தை வெளியிடுவதற்கு தேர்தல் ஆணையத்தை ஒப்புதல் பெற வேண்டுமா என்பது கேள்வியாக உள்ளது.

- Advertisement -

இதுபோன்ற ஒரு சம்பவம் இப்போதுதான் முதல்முறையாக நடக்கிறது. இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டு பதில் அளிக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.அதனால் தேர்தல் ஆணையம் அளிக்கும் விளக்கத்தை பொருத்தே ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி முடிவாகும். ஏனென்றால் இந்த படத்தில் விஜய் பேசும் அரசியல் வசனங்கள், அரசியல் சார்ந்த காட்சிகள் இருக்கும் பட்சத்தில் அதுவும் ஒரு பிரசார படமாக மாற்றிவிடும்.

இந்த படம் கண்டென்ட் ரீதியாக எந்தவிதமான பிரச்னைகளையும் சந்திக்கவில்லை. ஆனால் அரசியல் சார்ந்த சில வசனங்கள், சில காட்சிகள் தான் இந்த படத்திற்கு சென்சார் வழங்குவதில் சிக்கலை ஏற்படுத்தியது. 3 மாதங்களாக போராடி படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைத்த சூழலில் இப்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக படம் திரைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்