- Advertisement -
Homeபொழுதுபோக்குவெள்ளி விழா நாயகன் மைக் மோகனின் அசுர வளர்ச்சி, அதலபாதாள வீழ்ச்சி, பின்னணியாக இருந்த...

வெள்ளி விழா நாயகன் மைக் மோகனின் அசுர வளர்ச்சி, அதலபாதாள வீழ்ச்சி, பின்னணியாக இருந்த வேலை பார்த்த பிரபல நடிகரின் தாய்மாமா – இது வேற லெவலா இருக்குதே!

- Advertisement -

நடிகர் மோகன், தமிழ் சினிமாவில் மிக முக்கியமான முன்னணி நடிகராக வலம் வந்தவர். குறிப்பாக 1980களில் அவர் நடித்த படங்களை காண ரசிகர்கள் கூட்டம் தியேட்டர்களில் அலைமோதும். அவரது படங்கள் பெரும்பாலும் வெள்ளி விழா படங்கள்தான். அதனால் அவருக்கு வெள்ளிவிழா நாயகன் என்ற பெயர் உண்டு.

அவர் நடித்த பயணங்கள் முடிவதில்லை, தென்றலே என்னைத் தொடு, உயிரே உனக்காக, பாடு நிலாவே, உதயகீதம், இதயக்கோவில், மௌனராகம் போன்ற பல படங்கள், ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவை. இளையராஜா இசையில், எஸ்பிபி குரலில் மோகன் பாடிய பாடல்கள், இன்றும் இசை ரசிகர்களால் போற்றப்பட்டு வருகின்றன.

- Advertisement -

ஒரு கட்டத்தில் நடிப்பில் இமேஜை இழந்த நடிகர் மோகன், பல ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருந்தார். நடித்தால் கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் என்று அவர் பிடிவாதம் பிடித்த நிலையில், மற்ற கேரக்டர்களில் நடிக்காமல், பட வாய்ப்புகளை மொத்தமாக இழந்தார். இப்போது விஜய் நடித்துள்ள கோட் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். கோட் படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸாகிறது.

இந்நிலையில், மைக் மோகனன் அசுரவளர்ச்சிக்கும், அதலபாதாள வீழ்ச்சிக்கும் காரணம், அவருக்கு பின்னணி குரல் பேசிய பாடகர் எஸ்என் சுரேந்தர்தான் என்பது தெரிய வந்துள்ளது. அதாவது, நடிகர் மோகன் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர். கன்னட மொழி பேசுபவர். அவருக்கு தமிழ் சரியாக பேச வராது. தவிர, அவரது குரலும் ரசிகர்களை கவரும் விதமாக வசீகரமாக இருக்காது.

- Advertisement -

அதனால் ஆரம்பம் முதலே, நடிகர் மோகனுக்கு பின்னணி குரல் பேசியவர் பாடகர் எஸ் என் சுரேந்தர்தான். இவர் நடிகர் விஜயின் அம்மா ஷோபாவின் சொந்த சகோதரர். அதாவது விஜய்க்கு சொந்த தாய்மாமா. இவர் மாமரத்து பூ வெடுத்து மஞ்சம் ஒன்று போடவா, பூங்கதவே தாழ் திறவாய் போன்ற சூப்பர் ஹிட் பாடல்களை பாடியவர்.

நடிகர் மோகனின் 90 சதவீத படங்களுக்கு அவருக்கு பின்னணி குரல் பேசியவர் எஸ்என் சுரேந்தர்தான். அதனால் மோகனின் வெற்றியில், எஸ்என் சுரேந்தருக்கு பெரும்பங்கு உண்டு. அதனால் ஒரு கட்டத்தில், மோகனுக்கு டப்பிங் பேச அவருக்கு தருகிற சம்பளத்தில், பாதி எனக்கு சம்பளமாக கொடுங்கள் என கேட்டிருக்கிறார். இதனால் மோகனுக்கும், எஸ் என் சுரேந்தருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு, அதில் இருந்து மோகனுக்கு அவர் பின்னணி பேசுவதில்லை. அதன்பிறகு உருவம் போன்ற சில படங்களில் மோகன் சொந்தக் குரலில் பேச, ரசிகர்கள் மிரண்டு போய்விட்டனர். அதன்பிறகு அதலபாதாள வீழ்ச்சியை சந்தித்த மோகன், இப்போது விஜய் படம் மூலமாக, ரீ என்ட்ரி தருகிறார்.

- Advertisement -

சற்று முன்