- Advertisement -
Homeபொழுதுபோக்குமதுரையில் டிவிகே மாநாடு… தரமான சம்பவம் செய்ய காத்திருக்கும் தளபதி விஜய் - இந்த முறை...

மதுரையில் டிவிகே மாநாடு… தரமான சம்பவம் செய்ய காத்திருக்கும் தளபதி விஜய் – இந்த முறை அந்த பிரபல அரசியல் நடிகரும் மேடைக்கு வருகிறாரா?

- Advertisement -

கடந்த 2024ம் தேதி பிப்ரவரி மாதம் 2ம் தேதி நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்குவதாக அறிவித்தார். பிறகு கட்சிக்கொடி கொள்கை பாடல் போன்றவற்றை அறிமுகம் செய்தார். பிறகு கடந்த ஆண்டு அக்டோபர் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள விசாலை என்ற கிராமத்தில் தனது கட்சியில் முதல் அரசியல் மாநில மாநாட்டை மிக பிரமாண்டமாக நடத்தி அசத்தினார்.

இந்த மாநாட்டில் நடிகர் விஜய் 48 நிமிடங்கள் ஆவேச உரை நிகழ்த்தினார். மத்திய அரசை பாசிசம் என்றும் மாநில அரசை பாயாசம் என்றும் விமர்சித்தார். தனது கொள்கை எதிரி பாஜக என்றும் அரசியல் எதிரி திமுக என்றும் பகிரங்கமாக பேசினார். நடிகர் விஜயா இப்படி பேசுவது என்று தமிழக மக்களே ஆச்சரியப்படும் அளவுக்கு விஜய் பேச்சில் அனல் தெறித்தது.

- Advertisement -

இப்போது நடிகர் விஜய் தனது தவெக கட்சியின் 2வது அரசியல் மாநாட்டை வரும் ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி மதுரையில் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த நாள் கேப்டன் விஜயகாந்தின் பிறந்த நாளாகும். அத்துடன் நடிகர் விஜய், சங்கீதா திருமண நாளும் ஆகும். இந்த மாநாட்டிலும் பல தரமான சம்பவங்கள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரையை பொருத்த வரை, மக்கள் கூட்டம் முதல் மாநாட்டை விட பன்மடங்கு அதிகமாக வரும் வாய்ப்புள்ளது. அத்துடன் மதுரை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் விஜய்க்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம். அத்துடன் சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால் இந்த மாநாட்டில் அரசியல் பிரபலங்கள் சிலர் பங்கேற்கவும் தங்களது கூட்டணியை விஜயுடன் அறிவிக்கவும் வாய்ப்புள்ளது.

- Advertisement -

அதுமட்டுமின்றி தவெக நடத்தும் 2வது மாநில மாநாட்டில் ஆந்திரா துணை முதல்வர் நடிகர் பவன் கல்யாண் பங்கேற்கவும் அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. கடந்த மாதம் மதுரையில் நடந்த முருகன் மாநாட்டில் பங்கேற்ற பவன் கல்யாண், மீண்டும் விஜய் நடத்தும் கட்சி மாநாட்டிலும் பங்கேற்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அவரது ஆதரவு விஜய்க்கு ஆரம்பம் முதலே இருந்தும் வருகிறது.

தவெக அரசியல் தலைவராக முழுவீச்சில் இருந்துவரும் நடிகர் விஜய் இந்த முறை மாநாட்டில் பல முக்கிய அதிரடி அறிவிப்புகளை வெளியிடவும் திட்டமிட்டுள்ளார். எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க விரும்பாத விஜய், தங்களது கொள்கைகளுக்கு நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு வரும் கட்சிகளுக்கு வாய்ப்பளிக்கவும் தயாராக இருக்கிறார். அதனால் இந்த மாநாட்டில் தமிழ்நாட்டு அரசியலில் பல திருப்பங்களை தரும் விஷயங்கள் அரங்கேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்