- Advertisement -
Homeபொழுதுபோக்குலோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் படத்தில் எல்சியு கன்பார்ம் - படத்தில் மொத்தம் இத்தனை ஹீரோக்களா? தரமான...

லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் படத்தில் எல்சியு கன்பார்ம் – படத்தில் மொத்தம் இத்தனை ஹீரோக்களா? தரமான சம்பவம் லோடிங்….

- Advertisement -

மாநகரம் படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்து இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இவர் யாரிடமும் உதவி இயக்குனராக பணி செய்யாமல் குறும்படங்களை இயக்கிய அனுபவத்தில் நேரடியாக இயக்குனராக களத்தில் இறங்கி ஜெயித்தது இவரது ஸ்பெஷல் என்பதை யாரும் மறுக்க முடியாது.

முதல் படம் மாநகரம் மிகப்பெரிய வெற்றியை அடையாளத்தை லோகேஷ் கனகராஜூக்கு கொடுத்த நிலையில் அடுத்து அவரது இயக்கத்தில் வெளியான கைதி விக்ரம் மாஸ்டர் போன்ற படங்களும் மாஸ் ஹிட் படங்களாக இருந்தன. ஆனால் அடுத்து அவர் இயக்கிய லியோ கூலி படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெற்றாலும் விமர்சன ரீதியாக படுதோல்வி படங்களாக இருந்தன.

- Advertisement -

லோகேஷ் கனகராஜ் அவரது படங்களில் எல்சியு என்ற முறையில் பழைய படத்தின் கேரக்டர்களை அடுத்தடுத்த படங்களில் கொண்டு வந்தார். அது ரசிகர்களின் பெரிய அளவில் ரீச் ஆனது. அதனால் அவர் படங்கள் என்றாலே எல்சியு இருக்கிறதா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது. அவர் திரைப்பட தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.

தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் பாக்யராஜ் கண்ணன் என்பவரது இயக்கத்தில் பென்ஸ் என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஹீரோவாக ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார். இந்த படமும் கைதி லியோ விக்ரம் படங்களை போல எல்சியு வருகிறது என்ற தகவல் உறுதியாகி விட்டது.

- Advertisement -

இந்த படத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் சூர்யா கார்த்தி உட்பட 7 முக்கிய ஹீரோக்கள் கேமியோ ரோலில் வருகின்றனர். இந்த படத்தின் கதை விக்ரம் படத்தின் கதை முடிந்த பிறகு 6 மாதங்களுக்கு பிறகு தொடங்கும் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பிரதான வில்லனாக நட்சத்திர நடிகர்தான் நடிக்க உள்ளார். அவர் அவர் விஜய் சேதுபதியாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. நடிகர் ரவி மோகன் நடிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் லியோ படங்களில் நடிகர் விஜய்தான் ஹீரோ. அவரும் இந்த பென்ஸ் படத்தில் கேமியோ ரோலில் வர வாய்ப்புள்ளதா என்ற ஆர்வமான கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ஆனால் அவர் ஜனநாயகன் படமே கடைசி என அறிவித்துவிட்டதால் அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்றே சொல்லப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்