- Advertisement -
Homeபொழுதுபோக்குசனிக்கிழமைகளில் மட்டுமே மக்கள் சந்திப்பு பயணம்… இது என்ன வெள்ளிக்கிழமை ராமசாமி ஸ்டைலா? கலாய்க்கும் அரசியல்...

சனிக்கிழமைகளில் மட்டுமே மக்கள் சந்திப்பு பயணம்… இது என்ன வெள்ளிக்கிழமை ராமசாமி ஸ்டைலா? கலாய்க்கும் அரசியல் விமர்சகர்கள்

- Advertisement -

தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய் குதித்த போது ஆரம்பத்தில் பத்தோடு பதினொன்று என்றுதால் தமிழக அரசியல் கட்சிகளிடையே பேச்சு எழுந்தது. ஆனால் விக்கிரவாண்டியில் முதல் மாநாடு நடந்த பிறகும் அங்கு 48 நிமிடங்கள் விஜய் ஆவேசமாக பேசிய பிறகும் தமிழக அரசியல் களத்தில் பெரிய அதிர்வலை எழுந்தது.

தொடர்ந்து திமுக என்னுடைய அரசியல் எதிரி பாஜக என்னுடைய கொள்கை எதிரி என பகிரங்கமாக அறிவித்த தவெக தலைவர் விஜய், தனது 2வது மாநில மாநாட்டை மதுரையில் நடத்திக் காட்டினார். இப்போது தனது அரசியல் சுற்றுப் பயணத்தை அவர் அறிவித்திருக்கிறார். வருகிற 13ம் தேதி திருச்சியில் தன்னுடைய மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை விஜய் துவங்க உள்ளார்.

- Advertisement -

வருகிற 13ம் தேதி துவங்கி டிசம்பர் 20ம் தேதி வரை ஏறக்குறைய 4 மாதங்கள் இந்த சுற்றுப்பயணத்தை நடிகர் விஜய் மேற்கொள்கிறார். ஆனால் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் மட்டுமே மக்களை நடிகர் விஜய் சுற்றுப்பயணத்தில் சந்திக்கிறார். மற்ற நாட்களில் அவர் சுற்றுப்பயணம் இல்லை என்பது தவெக கட்சியினர் மற்றும் மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதில் வருகிற அக்டோபர் 4ம் தேதி மற்றும் 5ம் தேதியில் மட்டும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவை நீலகிரி திருப்பூர் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 2 நாட்கள் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஒவ்வொரு சனிக்கிழமையும் குறைந்தபட்சமாக மூன்று மாவட்டங்கள் வரை அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது.

- Advertisement -

இதில் நடிகர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்கிற நாட்கள் அனைத்துமே சனிக்கிழமைகளில் வருகிறது. சனிக்கிழமை ஒரு நாள் மட்டுமே மக்களை சந்திக்கிறார் என்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. சனிக்கிழமை ஒரு நாள் மட்டும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மத்த நாட்களில் விஜய் ஓய்வெடுப்பது ஆச்சரியத்தை தந்துள்ளது.

வழக்கமாக ஷூட்டிங் செல்லும் காலத்திலேயே விஜய் ஞாயிறு தினங்களில் பிரேக் எடுத்துக்கொள்வார். அதே போல் மாலை 6 மணிக்கு மேல் ஷூட்டிங்கில் இருக்க மாட்டார். ஏற்கனவே பனையூரை விட்டு வெளியே வராமல் ஒர்க் ப்ரம் ஹோம் பாலிடிக்ஸ் நடத்துவதாக புகார் உள்ள நிலையில், சனிக்கிழமை மட்டுமே விஜய் சுற்றுப்பயணம் என்கிற அறிவிப்பு இன்னும் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. வெள்ளிக்கிழமை ராமசாமி போல, இவர் சனிக்கிழமை அரசியல்வாதியா என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்