திரைப்பட நடிகராக உச்சம் தொட்டவர் நடிகர் விஜய். மக்கள் செல்வாக்கும் ஆதரவும் அமோகமாக அவருக்கு இருந்தாலும் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களால் ஏகப்பட்ட சிக்கல்களை நெருக்கடிகளை விஜய் இப்போது சந்தித்து வருகிறார். இப்போதைய அரசியல் சூழலில் விஜய் முதல்வர் ஆவாரா என்பதே கேள்விக்குறியாக மாறியிருக்கிறது.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி, காங்கிரஸ் கட்சி 5 எம்எல்ஏக்கள் ஆதரவு என 113 எம்எல்ஏக்கள் தவெக கட்சியின் கைவசம் இருந்தும் இன்னும் விஜய் தமிழக முதல்வராக பதவியேற்க முடியவில்லை. இன்னும் தமிழக கவர்னர் விஜயை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க மறுக்கிறார். 118 எம்எல்ஏக்கள் ஆதரவு வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
சில மாநிலங்களில் இதுபோன்ற நெருக்கடியான சூழல் முன்பே ஏற்பட்டுள்ளது. அதுபோன்ற சிக்கலான நேரங்களில் முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து வைத்து விட்டு அதன்பிறகு சட்டசபையில்தான் எம்எல்ஏக்களின் ஆதரவு பெரும்பான்மையை நிரூபிக்க சொல்வது வழக்கம். அதுதான் வழக்கமாக இருந்துள்ளது.
ஆனால் தவெக தலைவர் விஜய்க்கு மட்டும் பதவிப்பிரமாணம் செய்து வைக்கவே 118 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம் வேண்டும் என்று தமிழக கவர்னர் ( பொறுப்பு) ராஜேந்திர விஸ்வநாத அர்லேகர் கண்டிப்பாக கூறியிருக்கிறார். இதற்கு பின்னணியில் இருப்பதுதான் பாஜக தான் என்கிற குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சிகள் 4 விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் 2 என விஜய் கட்சிக்கு தேவையான 6 எம்எல்ஏக்கள் இருந்தும் அவர்களிடம் தவெக ஆதரவு கேட்ட நிலையில் அவர்கள் தொடர்ந்து தாமதித்து வருகின்றனர். இதற்கிடையே திமுக அதிமுக இரண்டும் இணைந்து தமிழகத்தில் ஆட்சியமைக்க உள்ளதாகவும் ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது.
ஆனால் இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் தவெக எடுத்துள்ள ஒரு முக்கியமான அதிரடியான முடிவு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அப்படி திமுக அதிமுக கூட்டணி சேர்ந்து ஆட்சியமைக்கும் பட்சத்தில் தவெக தலைவர் விஜய் உட்பட 108 எம்எல்ஏக்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்து விடுவது என்கிற தீர்மானத்துக்கு வந்துள்ளனர். இது இன்னும் பரபரப்பை அதிகரிக்க செய்துள்ளது.





