- Advertisement -
Homeபொழுதுபோக்குதிரும்பிய பக்கமெல்லாம் கல்லடி வாங்கும் தவெக கட்சியினர்… இனிமேல் முட்டுக் கொடுத்தா நம்ம மரியாதையும் போயிடும்…...

திரும்பிய பக்கமெல்லாம் கல்லடி வாங்கும் தவெக கட்சியினர்… இனிமேல் முட்டுக் கொடுத்தா நம்ம மரியாதையும் போயிடும்… விசிலை வீசி எறிந்து ஓட்டம் பிடித்த ரசிகர்கள்!

- Advertisement -

திமுக அதிமுக கட்சிகளுக்கு ஒரு மாற்று சக்தியாக தமிழக வெற்றிக் கழகம் உருவாகி இருக்கிறது. திரையில் மாஸ் ஹீரோவாக கெத்து காட்டிய நடிகர் விஜய் அரசியலிலும் ஒரு சிறந்த நாயகனாக அரசியல் தலைவராக வலம் வருவார். தமிழக மக்களுக்கு ஒரு நல்ல தலைவனாக அவர் ஆட்சி கொடுப்பார் என்றுதான் தமிழக மக்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் கரூரில் 41 பேர் பலியான சம்பவமே பலருக்கும் அதிர்ச்சியை தந்தது. அந்த நேரத்தில் விஜய் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க வராமல் தப்பியோடியது, பிறகு பனையூருக்கு பாதிக்கப்பட்ட மக்களை நேரில் வரவழைத்து ஆறுதல் சொன்னது எல்லாமே முரண்பட்டதாகவே தெரிந்தது.

- Advertisement -

குறிப்பாக பனையூர் பண்ணையார் என்று விமர்சனத்தில் சிக்கிய போதும் அவரை தவெக கட்சியினர் முட்டுக்கொடுத்து, திமுக வினர் மீது பழிபோட்டு விஜயின் புகழ் பாடினர். கடந்த மாதம் 27ம் தேதி சங்கீதா விஜய் மீது கொடுத்த புகாரை கூட இதெல்லாம் திமுகவின் திட்டமிட்ட சதி என்றுதான் அம்பை திருப்பி விட்டனர்.

எங்கள் தளபதி தங்கமானவர் ஒழுக்கத்தின் சீலர் என்றுதான் தவெக கட்சி நிர்வாகிகள் பேசி வந்தனர். ஆனால் நேற்று சென்னையில் நடந்த திருமண விழாவில் நடிகை திரிஷாவுடன் ஒரே மாதிரியான நிறத்தில் பட்டுப்புடவை வேட்டி சட்டையில் இருவரும் ஜோடியாக வந்து மணமக்களை வாழ்த்திய போதுதான், விஜயின் உண்மையான முகமும் சுயரூபமும் புரிந்தது.

- Advertisement -

கருணாநிதி எம்ஜிஆர் ஸ்டாலின் செய்யாததா இதெல்லாம் என்று விமர்சனம் செய்பவர்களுக்கு ஒரே பதில்தான், அப்படி என்றால் அவர்களுக்கும் விஜய்க்கும் என்ன வித்யாசம்? யோக்கியம் இல்லாத தலைவர்கள் வரிசையில் விஜயும் ஒருவர் என்றால் அப்புறம் விஜய்க்கு என்று என்ன தனித்துவம் மரியாதை இருக்கிறது? அதற்கு ஸ்டாலின் அல்லது எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக்கி விட்டு மக்கள் போய்விடலாமே என்றுதான் பலரும் கேள்வி கேட்கின்றனர்.

அதுமட்டுமின்றி கட்சி தொண்டர்கள் கட்சி நிர்வாகிகள் தனது சொந்த குடும்பம் என எல்லாவற்றையும் விட திரிஷா தான் முக்கியம். ஊர் என்ன சொன்னால் என்ன, கட்சி எப்படி போனால் என்ன என்று இப்படி ஒரு தலைவர் இருந்தால் அக்கட்சியினரின் எதிர்காலம் என்ன, தேர்தல் முடிவுகள் என்ன? இதுவரை முட்டுக்கொடுத்து மானம் கெட்டது போதும், இனியாவது மரியாதையை காப்பாற்றிக் கொள்வோம் என்று விசிலை தூக்கி எறிந்துவிட்டு தவெக கட்சியினர் ஓட்டம் பிடிப்பதாக இணையத்தில் பலரும் கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்