- Advertisement -
Homeபொழுதுபோக்குகொஞ்சம் பொறுங்க பாஸ்… ஒவ்வொரு வீட்டில் இருந்தும் விஜயும் விஜியும் அன்று வெளியே வருவார்கள் -...

கொஞ்சம் பொறுங்க பாஸ்… ஒவ்வொரு வீட்டில் இருந்தும் விஜயும் விஜியும் அன்று வெளியே வருவார்கள் – தவெக 3ம் ஆண்டு துவக்க விழாவில் நடிகர் விஜய் பேச்சு!

- Advertisement -

சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் கட்சியின் 3ம் ஆண்டு துவக்க விழா இன்று காலை நடைபெற்றது. இந்த விழாவில் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் பேசியதாவது, நம் கட்சியின் 3வது ஆண்டு தொடக்க விழா இன்று. தமிழ்நாட்டில் ஒரு மிகப்பெரிய கட்சியாக நாம் வளர்த்துள்ளோம். அது மக்களால் தான். நம்மை நேசிக்கும் கோடிக்கணக்கான மக்கள்தான் இதற்கு முக்கிய காரணம்.

மக்களாகிய நீங்கள் தான் என்னுடைய மிகப்பெரிய பலம். உங்களை நம்பித்தான் நானும் கட்சியும் இருக்கிறோம். இது உங்களுக்கே தெரியும். 1979ம் ஆண்டு ஜூன் மாதத்தில் எம்ஜிஆர் அளித்த வானொலி பேட்டியில் பேசும்போது, அண்ணா இருந்த இடத்தில் இப்படிப்பட்டவர்கள் அமரும் நிலை வந்திருச்சு என்று எண்ணி எண்ணி கண்ணீர் வடித்தேன். இன்று அந்த கண்ணீரை துடைக்க ஆரம்பித்த கட்சி தான் அதிமுக என்றும் சொன்னார்.

- Advertisement -

2017க்கு அப்புறம் 2021க்கு அப்புறம் தமிழ்நாட்டில் நிலைமையை யோசித்துப் பார்த்த நம் தமிழக மக்களும் காமராஜர் இருந்த இடத்தில் அண்ணா இருந்த இடத்தில் எம்ஜிஆர் இருந்த இடத்தில் இப்படிப்பட்டவர்களும் அமரும் நிலை ஏற்பட்டு விட்டதே என்று தமிழக மக்கள் கண்ணீர் வடித்தார்கள். இன்று அந்த கண்ணீரை துடைக்க ஆரம்பித்த இயக்கம் தான் தமிழக வெற்றிக்கழகம். இப்படி எல்லாம் நான் பேசுவதால் கண்டிப்பாக சிலர் கொந்தளிப்பார்கள். அது பற்றி நாம் கவலை படக்கூடாது. கொந்தளிப்பதுதான் அவர்கள் வேலையே.

எம்ஜிஆர் கட்சியை ஆரம்பித்த பிறகு எம்ஜிஆர் ஜெயித்த பிறகும் கூட சட்டசபையில் ஏதோ ஒரு நடிகர் கட்சி வந்துள்ளது, ஏதோ ஒரு புதிய கட்சி வந்துள்ளது, புரட்சித் தலைவர் என கிண்டலும் கேலியும் செய்தார்கள். நாம் அரசியலுக்கு வந்த பிறகும் கூட இந்த விஜய்க்கு என்ன அனுபவம் இருக்கு? எம்ஜிஆர் அனுபவம் என்ன தெரியுமா? 52 முதல் 72 வரை 20 ஆண்டுகள் திமுகவில் இருந்த அரசியல் அனுபவம் இருக்கு தெரியுமா என்று கேட்ட அதே வாய்தான் எம்ஜிஆரைப் பார்த்து அரசியல் அரிச்சுவடி தெரியாதவர் அட்டகத்தி வாய் விளம்பரம் என்று சொன்னார்கள்.

- Advertisement -

இவருக்கு கேள்வி மட்டும் தான் கேட்க தெரியும். பதில் சொல்லத் தெரியாது. நிருபர்களை சந்திக்க மாட்டார். டெல்லியை பகைச்சுக்க மாட்டார். மேலே இருந்து அவருக்கு அவ்வளவு அழுத்தம் என்று சொன்னதும் அதே வாய்தான். விஜய் வீட்டை விட்டு வெளியே வா விஜய் வெளியே வா என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் பொருங்க பாஸ் வருவாங்க.

சட்டசபை தேர்தல் அன்று முறையாக வருவோம். ஓட்டு போடும் அன்று ஒவ்வொரு வீட்டில் இருந்தும் விஜயும் விஜயும் கையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் வருவார்கள். திமுகவை வீழ்த்த தவெகவால் மட்டுமே முடியும். ஒவ்வொரு வீட்டிலும் தவெக உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக தான் மக்களின் ஒரே தேர்வாக இருக்கும் என்று நடிகர் விஜய் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்