- Advertisement -
Homeபொழுதுபோக்குஉங்க வாயால அதை சொல்ல வெச்சதுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி - முதல்வர் விஜய்க்கு உதயநிதி...

உங்க வாயால அதை சொல்ல வெச்சதுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி – முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் தந்த பதிலடி!

- Advertisement -

தமிழக சட்டசபையில் நேற்று பேசிய திமுக எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆளுங்கட்சி தவெக குறித்தும் முதல்வர் விஜய் குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அதற்கு முதல்வர் விஜய் நீண்ட அறிக்கை ஒன்றை தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டு பதில் தந்திருந்தார். இது திமுக குறித்து விஜயும் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதற்கு பதில் தரும் விதமாக, திமுக கட்சியின் சட்டசபை எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது வலைதள பதிவில் கூறியிருப்பதாவது, பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும்.

- Advertisement -

அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம். பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க டெய்லி அட்டெனென்ஸ் போட்டுட்டு இருக்கவில்லை. நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே.

அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா சிஎம் சார்? 2006ம் ஆண்டில் அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, போஸ்ட் பண்ணியிருக்கீங்களே?

- Advertisement -

அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு எம்எல்ஏ-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல. முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட – மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல.

திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி என்று அந்த பதிவில் உதயநிதி ஸ்டாலின் முதல்வர் விஜய்க்கு பதில் தந்திருக்கிறார். சட்டசபையில் துவங்கிய வாக்குவாதம் இப்போது இணையத்தில் அறிக்கைகளாக மாறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்