- Advertisement -
Homeபொழுதுபோக்கு116 நாட்களாக முதல்வர் விஜய் ஏன் வாயே திறக்கலே? ஒருவேளை எம்எல்ஏவை விசாரிக்க அவருக்கு அப்படி...

116 நாட்களாக முதல்வர் விஜய் ஏன் வாயே திறக்கலே? ஒருவேளை எம்எல்ஏவை விசாரிக்க அவருக்கு அப்படி ஒரு பயமா? – உதயநிதி ஸ்டாலின் கிண்டல்!

- Advertisement -

இன்று செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது, கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ விவகாரத்தில் இன்னொன்றையும் நான் கேட்க விரும்புகிறேன். இந்த விஷயத்தை தலைமை செயலாளர் முதல்வரிடம் சொன்னாரா? இல்லையா? சொல்லவில்லை என்றால் அது மிகப்பெரிய தவறு. அப்படி சொல்லியிருந்தால் 116 நாட்களாக முதல்வர் ஏன் இன்னமும் வாயை திறக்காமல் இருக்கிறார். அவருக்கு பயமாக இருக்கலாம். ஒருவேளை எம்எல்ஏவை கூப்பிட்டு கேள்வி கேட்டு அதற்கு எம்எல்ஏ நீ மட்டும் என்ன ஒழுங்கா? என்று முதலமைச்சரை பார்த்து திருப்பி கேட்டுடலாம் இல்லையா? அதனால் பயந்துட்டு கேட்காமல் இருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் இதை எல்லாம் பார்த்துட்டு இருக்காங்க. இப்படிப்பட்ட ஒரு சம்பவமே நடக்கலேன்னு சில அமைச்சர்கள் முட்டு கொடுத்துட்டு இருந்தாங்க. அவங்க எல்லாம் என்ன பதில் சொல்ல போறாங்க? என்று அவர் கூறியிருக்கிறார்.

சற்று முன்