- Advertisement -
Homeபொழுதுபோக்குபல்வேறு நெருக்கடிகளுக்கு பிறகு 119 நாட்கள் கழித்து தவெக எம்எல்ஏவை கைது செய்த சோப்ளாங்கி அரசு...

பல்வேறு நெருக்கடிகளுக்கு பிறகு 119 நாட்கள் கழித்து தவெக எம்எல்ஏவை கைது செய்த சோப்ளாங்கி அரசு – உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்!

- Advertisement -

சட்டசபை எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த தவெக-வின் கள்ளக்குறிச்சி எம்எல்ஏவை பல்வேறு தரப்பிலிருந்து ஏற்பட்ட நெருக்கடியால் புகார் கொடுத்து 119 நாட்கள் கழித்து கைது செய்திருக்கிறது இந்த சோப்ளாங்கி அரசு.முதலில் இந்த சம்பவம் நடக்கவேயில்லை என்று பொய் சொன்னார்கள். பிறகு புகார் வரவில்லை என்று புளுகினார்கள். எம்.எல்.ஏ பாவம் என்று வாடகை வாய்கள் மூலம் இஷ்டத்திற்கு அடித்து விட்டார்கள். இத்தனைக்கும் பிறகு பாதிக்கப்பட்ட அதிகாரியின் மன உறுதி – எதிர்க்கட்சிகளின் போராட்டங்கள் – நீதிமன்றத்தின் தொடர் குட்டு ஆகியவற்றால் எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

சற்று முன்