- Advertisement -
இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுக எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது, கடந்த ஜூலை 31ம் தேதியே கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ விவகாரம் தொடர்பாக தலைமை செயலாளரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் மூடி மறைக்க முயற்சி பண்ணியிருக்கிறார். போய் பேரம் பேசியிருக்கிறார். பாதிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி அந்த அம்மாவிடம் பேசியிருக்கிறார். நீங்க வேற டிஸ்ட்ரிக் மாத்தி போயிடுங்கம்மா, இதை மூடி மறைச்சிடலாம் என்று சொல்லியிருக்கிறார். அவர் மேல நடவடிக்கை எடுக்கணும். அதனால் தலைமை செயலாளரை இந்த வழக்கில் அக்யூஸ்ட்டாக சேர்க்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியிருக்கிறார்.





