- Advertisement -
Homeபொழுதுபோக்குமறைந்த நடிகர் ரகுவரனுக்கு இப்படி ஒரு ஆசையா? - ச்சே என்ன மனுஷன்யா இவரு, இப்படி...

மறைந்த நடிகர் ரகுவரனுக்கு இப்படி ஒரு ஆசையா? – ச்சே என்ன மனுஷன்யா இவரு, இப்படி எல்லாம் ஆசைப்பட்டு இருக்கிறாரே

- Advertisement -

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகர் என்றால், ரகுவரன் பெயரை தவிர்த்து கூறிவிடவே முடியாது. கமல்ஹாசனுக்கு ஒரு பிரதான வில்லன் நாசர் என்றால், ரஜினிக்கு முக்கிய வில்லன் ரகுவரன்தான். ஒரு படத்தில், ஸ்ட்ராங்கான வில்லன் இருந்தால்தான், அந்த எதிரியை எதிர்கொள்வதில் ஹீரோவின் திறமை வௌி்பபடும். ரசிகர்களாலும், அந்த படத்தை முழுமையாக ரசிக்க முடியும்.

தேவர்மகன் படத்தில், நாசர் தவிர வேறு யாராலும் அந்த மாயத்தேவன் கேரக்டரை அந்த அளவுக்கு சிறப்பாக செய்திருக்க முடியாது. அதுபோல், பாட்ஷா படத்தில் மார்க் ஆண்டனி கேரக்டரை, ரகுவரனை தவிர யாராலும் நினைத்துப் பார்க்கவே முடியாது. அதுமட்டுமின்றி வில்லன் கேரக்டர் என்றால், ரகுவரனின் நடிப்பு அதகளமாக இருக்கும். ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு திருமலை, முகவரி போன்ற சில படங்களில் கேரக்டர் ரோலும் செய்தார் ரகுவரன்.

- Advertisement -

சினிமாவில் சிறந்த நடிப்பால், பல உயரங்களை தொட வேண்டிய ரகுவரன், தனது 49வது வயதிலேயே மண்ணை விட்டு மறைந்துவிட்டார் என்பதுதான் வேதனை. இன்றும் அவர் இருந்திருந்தால் நிச்சயம் தமிழ் சினிமாவில் வில்லன் கேரக்டரில் அசத்திக்கொண்டு தான் இருப்பார். ஜெயிலர், அண்ணாத்தே படங்களில் கூட அவரை வில்லனாக நாம் பார்த்திருக்க முடியும்.

சினிமாவில் கொடூர வில்லனாக நடித்த ரகுவரன், நிஜத்தில் அவர் மனம் மிக எளிதானதாக, இலகுவானதாக இருந்திருக்கிறது என்பதற்கு சான்றாக, சமீபத்தில் அவரது பழைய நேர்காணல் ஒன்று வைரலாகி வருகிறது. அதில், அனுஹாசன் கேள்வி கேட்க, அதற்கு ரகுவரன் பதில் அளிக்கிறார். யாருமே எதிர்பார்க்காத பதிலாக, அவரது ஆசையாக அது இருக்கிறது.

- Advertisement -

நான் வாழ்க்கையில் செய்த பெரிய தப்பு நடிகன் ஆனதுதான். இதைவிட ஒரு நிலத்தில் பயிரிட்டு, அந்த பயிர் வளர்ந்து, அந்த பயிரை மூட்டையில் கொண்டு சென்று மார்க்கெட்டில் கொடுத்து, அதில் வரும் காசில் அரிசி வாங்கி கஞ்சி குடித்துவிட்டு இரவில் நிம்மதியாக தூங்க வேண்டும், அப்போது மழை வர வேண்டும் கடவுளே, ஆனால் இப்படி வெயில் அடிக்கிறதே என கவலைப்பட வேண்டும்.

ஆடுகள், கோழிகள், நாய்கள் இவற்றை எல்லாம் வைத்துக்கொண்டு, அவைகளுக்கு தினமும் சாப்பாடு கொடுத்து காப்பாற்ற வேண்டும். அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை நான் வாழ்ந்திருக்க ஆசைப்படுகிறேன். இது எல்லாம் வாழ்க்கையே அல்ல. இந்த வாழ்க்கையே எனக்கு பிடிக்கவில்லை என்று கூறி இருக்கிறார் ரகுவரன். இந்த நேர்காணலின் போது நடிகை சுகன்யாவும், ரகுவரன் அருகில் அமர்ந்திருக்கிறார். பல ஆண்டுகளுக்கு முந்தைய பழைய நேர்காணல் என்றாலும், ரகுவரன் ரசிகர்களால் இது அதிகமாக பகிரப்பட்டு, வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்