தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் மணிரத்னம். மௌனராகம் கீதாஞ்சலி தளபதி அக்னி நட்சத்திரம் நாயகன் ரோஜா பம்பாய் அலைபாயுதே ஆயுத எழுத்து உயிரே இருவர் இராவணன் பொன்னியின் செல்வன் பொன்னியின் செல்வன் 2 என மணிரத்னம் பெயர் சொல்லும் படங்களாக பல இருக்கின்றன.
பொன்னியின் செல்வன் படங்களை 2 பாகங்களை மணிரத்னம் இயக்கிய நிலையில் முதல் பாகம் பெரிய அளவில் வரவேற்பை வெற்றியை பெற்றது. ஆனால் 2ம் பாகம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. அதற்கு முக்கிய காரணம் நாவலில் இருந்த முடிவும் சினிமாவில் வந்த முடிவும் வெவ்வேறாக இருந்ததுதான். நாவலின் முடிவே சினிமாவிலும் இருந்திருக்க வேண்டும் என்று பலரும் விமர்சித்தனர்.
இப்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல் சிம்பு திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் தக்லைப் படம் உருவாகி ரிலீஸ்க்கு தயாராக உள்ளது. வருகிற ஜூன் 5ம் தேதி இந்த படம் வெளியாகிறது. நாளை இந்த படத்தில் இருந்து பர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாக உள்ளது. மேலும் படத்தின் பிரமோசன் நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
தக்லைப் ஒரு பான் இந்தியா படமாக உள்ளதால் கமல்ஹாசன் சிம்பு திரிஷா மற்றும் மணிரத்னம் உள்ளிட்டோர் தமிழ்நாடு கேரளா ஆந்திரா கர்நாடகா மற்றும் வெளிநாடுகளுக்கும் சென்று இந்த படத்தின் பிரமோசன் நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள திட்டமிட்டுள்ளனர். ஒவ்வொரு ஊரிலும் செய்தியாளர்கள், ரசிகர்களை சந்தித்து படம் குறித்து பேச உள்ள்னர். அதனால் சிம்பு 49 படப்பிடிப்பை கூட சிம்பு சில வாரங்கள் தள்ளி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தக்லைப் படத்துக்கு பிறகு இயக்குனர் மணிரத்னம் புதுமுகங்களை வைத்து படம் இயக்க உள்ளதாக ஒரு தகவல் பல நாட்களுக்கு முன்பே வெளியானது. இது ஒரு குறுகிய கால படமாவும், சின்ன பட்ஜெட்டில் உருவாகும் காதல் படம் என்றும் சொல்லப்பட்டது. இதற்காக புதுமுகங்கள் ஆடிஷன் நடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
ஆனால் இப்போது அந்த படத்தில் புதுமுகங்கள் வேண்டாம். ஏற்கனவே நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் நடிகைகள்தான் வேண்டும் என்ற முடிவுக்கு இயக்குனர் மணிரத்னம் வந்துவிட்டார். பெரிய நடிகர் நடிகைகளாக இல்லாமல், ரசிகர்களுக்கு ஓரளவு பரிச்சயமான முகம் தெரிந்த நடிகர் நடிகைகள்தான் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்றும் அவர் உதவி இயக்குனர்களிடம் கூறி இருக்கிறார். ஏன் மணிரத்னம் இப்படி ஒரு திடீர் முடிவை எடுத்தார்? புதுமுகங்கள் என்றால் படம் பெரிய விலை போகாது என்பதுதான் காரணமா, என்ற குழப்பத்தில் கோலிவுட் வட்டாரம் உள்ளது.





