- Advertisement -
Homeபொழுதுபோக்குபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான கேம் சேஞ்சர்... இயக்குனர் சங்கருக்கு சேஞ்ச் கொடுத்ததா... பார்க்கலாம் முழு...

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான கேம் சேஞ்சர்… இயக்குனர் சங்கருக்கு சேஞ்ச் கொடுத்ததா… பார்க்கலாம் முழு விமர்சனத்தை…

- Advertisement -

தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவே பாராட்டும் கவனிக்கத்தக்க இயக்குனர்களில் மிக முக்கியமானவர் ஷங்கர். அவர் இயக்கத்தில் வெளியான இந்தியன், முதல்வன், எந்திரன் உள்ளிட்ட திரைப்படங்கள் தமிழ் சினிமாவையும் தாண்டி, பலதரப்பட்ட மக்களால் கொண்டாடப்பட்டது. அதுமட்டுமல்லாமல் பாடல்களுக்கு அதிகமாக மெனக்கிட்டு காட்சிகளை ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைப்பதால் இவர் பிரம்மாண்ட இயக்குனர் என்றும் அழைக்கப்படுகிறார்.

 

ஆனால் சங்கருக்கு கடந்த சில ஆண்டுகள் போதாத காலங்களாகவே அமைந்துள்ளன. அவர் இயக்கத்தில் எடுக்கப்பட்ட ஐ திரைப்படம், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. நடிகர் விக்ரமுக்கும் அது பெருத்த அடியை தான் கொடுத்தது. பிறகு 2.0 படத்தை இயக்கி அதிலும் சங்கர் சருக்கினார். இந்தியன் 2 திரைப்படத்தை சொல்லவே வேண்டாம்.

 

அந்த அளவுக்கு அது சமூக வலைதளங்களில் கேலி கிண்டலுக்கு ஆளானது. இந்தியன் திரைப்படத்தை ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் கொண்டாடியதால் அந்த அளவுக்கு அதன் இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்தனர். ஆனால் அதில் பத்து சதவீதத்தைக் கூட இந்தியன் 2 திரைப்படம் நிறைவேற்றவில்லை என்பது தான் உண்மை.

 

இதன் காரணமாகவே அது சமூக வலைதளத்தில் ட்ரோல் மெட்டீரியலாக மாறியது. இப்படியான நெருக்கடியான சூழலில் தான் சங்கருக்கு கேம் சேஞ்சர் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. தெலுங்கு நடிகர் ராம்சரண் தான் இந்த திரைப்படத்தின் கதாநாயகன். தில் ராஜு தயாரிப்பில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படம், மாவட்ட தேர்தல் அதிகாரிக்கும் அரசியல்வாதிக்கும் இடையேயான மோதலைத்தான் விவரிக்கிறது.

 

கேம் சேஞ்சர் படத்தை தனி ஒருவனாக பிடித்து தாங்கி இருக்கிறார் நாயகன் ராம்சரண். தனக்கு கொடுக்கப்பட்ட அரசு அதிகாரி கதாபாத்திரத்தை, மிகவும் திறமையுடன் அவர் கையாண்டிருப்பதாக படத்தைப் பார்த்தவர்கள் பாராட்டி வருகின்றனர். அடுத்ததாக கேம் சேஞ்சருக்கு உயிரோட்டம் கொடுத்தது இசையமைப்பாளர் தமன் தான். ஒவ்வொரு காட்சியிலும் அவர் அதிகப்படியாக மெனக்கெட்டு இருப்பது இசையின் மூலம் நன்றாக தெரிகிறது.

 

வழக்கமான கமர்சியல் படமாக எடுக்கப்பட்டிருக்கும் கேம் சேஞ்சரில், முதல் பாதியில் வரும் காதல் காட்சிகளும் நகைச்சுவை காட்சிகளும் சலிப்பை ஊட்டுவதாக சினிமா விமர்சனங்கள் கூறுகிறார்கள். இரண்டாம் பாதியில் 20 நிமிடங்கள் வரும் பிளாஸ்பேக் காட்சிகள் நன்றாக இருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள். இருப்பினும் வில்லனாக வரும் எஸ் ஜே சூர்யாவின் கதாபாத்திரம் இன்னும் கனமாக இருந்திருக்கலாம் என்பதே பலரது கருத்தாக உள்ளது. ஒட்டுமொத்தமாக இந்தியன் 2 திரைப்படத்திற்கு இது எவ்வளவோ பரவாயில்லை என்றுதான் பலரும் கூறி வருகிறார்கள். ஆனால் இது சங்கருக்கு ரீ என்ட்ரி திரைப்படமாக இருக்கிறதா என்றால் அது மில்லியன் டாலர் கேள்விதான்.

 

சற்று முன்