கடந்த 2024ம் ஆண்டில் நடிகர் அஜீத்குமார் நடித்த விடாமுயற்சி மற்றும் குட்பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களும் இந்த 2025ம் ஆண்டின் துவக்கத்தில் திரைக்கு வந்தன. இதில் விடாமுயற்சி படம் சுமாரான வரவேற்பை பெற்றது. குட் பேட் அக்லி படம் அஜீத்குமார் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்தது. ஏனெனில் பழைய படங்களில் ரெஃபரென்ஸ்சில் இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார்.
அதனால் தமிழ்நாட்டில் குட்பேட் அக்லி படம் வணிக ரீதியாக பெரிய லாபத்தை தந்ததாக தயாரிப்பு நிறுவனத்துக்கு தந்ததாக கூறப்பட்டது. ஆனால் இந்த 2025 ம் ஆண்டில் நடிகர் அஜீத்குமார் படப்பிடிப்பில் எதுவும் கலந்து கொள்ளவில்லை. இந்த ஆண்டு முழுவதையும் கார் ரேஸ்க்காகவே அவர் ஒதுக்கிவிட்டார். 2025 ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை தொடர்ந்து 10 மாதங்கள் பல்வேறு நாடுகளில் நடந்த கார் ரேஸில் நடிகர் அஜீத்குமார் கலந்துக்கொண்டார்.
அஜீத்குமார் கார் ரேஸிங் என்ற அணியின் தலைவராக இருந்து அவர் இந்த கார் ரேஸில் பல போட்டிகளை பங்கேற்று அதில் சில போட்டிகளில் வெற்றியும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது நடிகர் அஜீத்குமார் மலேசியாவில் நடந்துவரும் எப் 4 கார் பந்தயங்களில் கலந்துக்கொண்டு வருகிறார். சமீபத்தில் மலேசியா சென்ற நடிகர் சிலம்பரசன் அஜீத்குமாரை நேரில் சந்தித்தது இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் அஜீத்குமார் நடிக்கும் அவரது 64வது படத்தின் ஷூட்டிங் வரும் 2026ம் ஆண்டின் துவக்கத்தில் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் டைரக்ட் செய்கிறார். ஏகே 64 படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ஆனால் இந்த படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் யார் என்பது இதுவரை முடிவாகவில்லை. இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
இதற்கிடையே ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. தற்போது கார் ரேஸ் பந்தயங்களில் ஈடுபட்டுள்ள நடிகர் அஜீத்குமாருக்கு ரிலையன்ஸ் நிறுவனம் ஸ்பான்சர் செய்து வருகிறது. அதனால் ஏகே 64 படத்தையும் ரிலையன்ஸ் நிறுவனம் தயாரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அவர்களிடமும் பேசப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் மதுரையில் உள்ள கோபுரம் ஸ்டுடியோ நிறுவனமும் ஏகே 64 படத்தை தயாரிக்க பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அதனால் ரிலையன்ஸ் நிறுவனமும் கோபுரம் ஸ்டுடியோவும் இணைந்து அஜீத்குமார் நடிக்கும் படத்தை தயாரிக்க பேச்சுவார்த்தை நடந்து தகவல் வெளியாகியுள்ளது. எனவே ஏகே 64 படத்தின் தயாரிப்பாளர்கள் இந்த இரண்டு நிறுவனங்களாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.





