- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னாச்சு நடிகர் கார்த்தி நடித்த வா வாத்தியார்… மீண்டும் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகிறதா? -...

என்னாச்சு நடிகர் கார்த்தி நடித்த வா வாத்தியார்… மீண்டும் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகிறதா? – விரக்தியடைந்த கார்த்தி ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் கார்த்தி. சீனியர் நடிகர் சிவக்குமாரின் இளைய மகன். நடிகர் சூர்யாவின் தம்பி. பருத்திவீரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் கார்த்தி, பல சூப்பர் ஹிட் படங்களை இதுவரை தந்திருக்கிறார்.

நடிகர் கார்த்தி கடைசியாக நடித்து வெளியான படம் மெய்யழகன். 96 பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கிய மெய்யழகன் படத்தில் நடிகர் கார்த்தியுடன் அரவிந்தசாமி முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

- Advertisement -

காதல் கமர்சியல் காமெடி ஆக்சன் என பலவிதமான நல்ல கதைகளை தேர்வு செய்து சிறந்த கேரக்டர்களில் நடிகர் கார்த்தி நடித்து வருகிறார். குறிப்பாக பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் கேரக்டரில் அவரது நடிப்பு ரசிகர்களிடம் பெரிய பாராட்டை பெற்றது.

இப்போது இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தின் வா வாத்தியார் என்ற படத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ளார். இந்த படத்தில் கார்த்தியுடன் கீர்த்தி ஷெட்டி சத்யராஜ் ராஜ்கிரண் ஆனந்தராஜ் சில்பா மஞ்சுநாத் கருணாகரன் வடிவுக்கரசி என பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த ஆண்டிலேயே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்னும் இந்த படம் ரிலீஸ் ஆகவில்லை.

- Advertisement -

இப்போது வா வாத்தியார் படம் குறித்த முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி வா வாத்தியார் படத்திற்கான படப்பிடிப்பு இன்னும் முடிக்கப்படவில்லை. மேலும் கூடுதலாக 20 நாட்கள் வரை ஷூட்டிங் தேவைப்படும் நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் சில மாதங்கள் தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதாக இப்போது தகவல் வெளியாகி உள்ளது. இதனால் கார்த்தி ரசிகர்கள் பலத்த ஏமாற்றத்தில் உள்ளனர்.

ஏற்கனவே நடிகர் கார்த்தி சர்தார் 2 படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார். மேலும் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி 2 படத்திலும் அவர் நடிக்க உள்ளார். இதற்கிடையே வா வாத்தியார் படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டு அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை நடித்துக் கொடுத்தால் மட்டுமே வா வாத்தியார் படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது. அதனால் படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப்போகிறது.

- Advertisement -

சற்று முன்