நல்ல தயாரிப்பாளர், சிறந்த இயக்குனர், ஆளுமையான நடிகர் என மூன்று பேர் கூட்டணி என்றாலே அந்த படம் நிச்சயமாக வெற்றிப் படமாக இருக்கும் என்பது ரசிகர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. அதை தமிழ் சினிமாவில் பல படங்கள் நிரூபித்து காட்டியிருக்கின்றன. உதாரணமாக ஷங்கர் இயக்கத்தில் சிவாஜி எந்திரன் இந்தியன் போன்ற படங்கள், அட்லி இயக்கத்தில் தெறி பிகில் மெர்சல் போன்ற படங்களை குறிப்பிட்டுச் சொல்லாம்.
இப்போது சமீபத்தில் வெளியான சில படங்களும் அதை நிரூபித்திருக்கின்றன. அப்படி தயாரிப்பாளர் இயக்குனர் நடிகர் என 3 பேர் கொண்ட வலுவான கூட்டணி அமையும் போது நிச்சயமாக அந்த படம் ரசிகர்கள் கொண்டாடும் ஒரு படைப்பாக மாறி விடுகிறது. அந்த வரிசையில் இயக்குனர் வெற்றிமாறன் முக்கியமானவர்.
பொல்லாதவன் ஆடுகளம் வடசென்னை அசுரன் விசாரணை விடுதலை போன்ற படங்களில் அவரது ஆளுமையான இயக்கத்தை ரசிகர்கள் கொண்டாடி இருக்கின்றனர். இதில் விடுதலை 2 படம் மட்டுமே எதிர்பார்த்த அளவில் இல்லை. எனினும் ஒரு தரப்பினருக்கு அந்த படமும் பிடிக்கவே செய்தது.
இதற்கிடையே நடிகர் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்குகிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் எஸ் தாணு தயாரிக்கிறார். இந்த படம் குறித்து கடந்த 2019ம் ஆண்டிலேயே மூவரும் பேசி முடிவான நிலையில் 5 ஆண்டுகளாகியும் இன்னும் படப்பிடிப்பு துவங்கவில்லை.
இப்போது வந்த லேட்டஸ்ட் தகவலின்படி கடந்த 2019ம் ஆண்டில் வாடிவாசல் படம் குறித்து கமிட் ஆன போது நடிகர் சூர்யாவின் சம்பளம் ரூ. 30 கோடியாக இருந்தது. ஆனால் இப்போது நடிகர் சூர்யாவின் சம்பளம் ரூ. 60 கோடியாக இருந்து வருகிறது. அதனால் 2019ம் ஆண்டில் ஒப்பந்தம் செய்யப்பட்ட வாடிவாசல் படத்தில் சூர்யாவின் சம்பளம் ரூ. 30 கோடியா, அல்லது ரூ. 60 கோடியா என்ற புதிய விவகாரம் தலைதூக்கி இருக்கிறது.
இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை விடுதலை 2 படங்களில் அதிக கவனம் செலுத்தியதாலும் நடிகர் சூர்யாவும் மற்ற படங்களில் நடித்து வந்தததாலும் வாடிவாசல் படப்பிடிப்பு இப்படி நான்கைந்து ஆண்டுகள் தள்ளிப் போனது. இதற்கு காரணம் இயக்குனரும் ஹீரோவும் தானே தவிர தயாரிப்பாளர் தாணு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பள விவகாரமும் வாடிவாசல் படப்பிடிப்பு தாமதத்தில் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிய வந்துள்ளது.





