- Advertisement -
Homeபொழுதுபோக்குதன்னை விட நன்றாக நடித்த நடிகரை ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே பழிவாங்கிய வடிவேலு, இப்படிப்பட்ட ஒரு கேரக்டரா...

தன்னை விட நன்றாக நடித்த நடிகரை ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே பழிவாங்கிய வடிவேலு, இப்படிப்பட்ட ஒரு கேரக்டரா இவர்?

- Advertisement -

சமீப காலமாக வடிவேலுவை குறித்து வெளிவரும் தகவல்கள் அனைத்தும் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்து வருகிறது. வடிவேலுவை ஒரு மிகச் சிறந்த நகைச்சுவை கலைஞனாகவே நாம் பார்த்திருப்போம். ஆனால் அவர் கேமராவிற்கு பின்னால் மிகவும் மோசமாக நடந்துகொள்வார் என்று அவருடன் நடித்த சக காமெடி நடிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு, வடிவேலு படப்பிடிப்பு தளத்தில் சக நடிகருக்கு செய்த காரியத்தை குறித்த ஒரு சம்பவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.

- Advertisement -

வடிவேலுவின் பல காமெடி காட்சிகள் மிக பிரபலமான காமெடி காட்சிகளாக இருந்தாலும் “கம்பீரம்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு காமெடி காட்சி பலரையும் ரசிக்க வைக்ககூடியது ஆகும். போலீஸ் காரராக இருக்கும் வடிவேலு, சக போலீஸார்களுடன் ஒரு பெண்ணை கைது செய்ய போவார். அந்த பெண் வடிவேலுவின் ஆடைகளை உருவி நிர்வாணம் ஆக்கிவிடுவார். இந்த பிரபலமான காமெடி காட்சியை பலரும் பார்த்திருப்போம்.

இந்த நிலையில் அப்பேட்டியில் கலந்துகொண்ட செய்யாறு பாலு, இந்த காட்சியை உருவாக்கும்போது வடிவேலு செய்த காரியத்தை குறித்த ஒரு சம்பவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். அதாவது இந்த காட்சியை படமாக்கியபோது இந்த காட்சி எப்படி வந்திருக்கிறது என்பதை பார்க்க வடிவேலு மானிட்டரை பார்த்தாராம்.

- Advertisement -

அப்போது வடிவேலுவுக்கு பின்னால் முன் வரிசையில் நின்றிருந்த ஒரு ஜூனியர் நடிகர் வடிவேலுவை விட நன்றாக நடித்திருந்தாராம். அதன் பின் வடிவேலு படப்பிடிப்பு தளத்தில் பலருக்கும் நடுவே அந்த நடிகரின் முகத்திலேயே அறைந்து அவரை பின் வரிசையில் நிற்கவைத்தாராம். இவ்வாறு ஒரு தகவலை செய்யாறு பாலு பகிர்ந்துகொண்டுள்ளார்.

- Advertisement -

சற்று முன்