நடிகர் வடிவேலு நடிக்க வந்த புதிதில் அவரை ஏளனமாக பார்த்தனர். முதல் படமான என் ராசாவின் மனசிலே படத்தில், ஒரு காட்சியில் வடிவேலுவை கவுண்டமணி மிதி மிதி என மிதித்தார். டைரக்டர் கட் சொன்ன பிறகும் பலமுறை எட்டி எட்டி மிதித்திருக்கிறார். பிறகு கேட்டதற்கு, இவன் எல்லாம் ஒரு ஆளுன்னு நடிக்க வந்திருக்கான் பாருன்னு, சொன்னாராம். அந்த ஆத்திரத்துல மிதிச்சேன் என்றாராம்.
அதே போல், முந்தானை முடிச்சு படத்தில் அறிமுகமாகி முன்னணி காமெடி நடிகையாக இருந்தவர் கோவை சரளா. பல படங்களில் கவுண்டமணி, செந்தில், எஸ்எஸ் சந்திரன், ஜனகராஜ் போன்ற முன்னணி காமெடி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர். வரவு எட்டணா செலவு பத்தணா படத்தில் வடிவேலுவுக்கு மனைவியாக நடிக்குமாறு, டைரக்டர் வி சேகர் சொன்ன போது, இந்த ஆள் கூடவா ஜோடியா நடிக்கணும்? என்று ஆச்சரியமாக கேட்டவர், சரியா வருமா சார்ன்னு சந்தேகப்பட்டாராம்.
அந்த அளவுக்கு வடிவேலுவுடன் நடிக்கவே சக நடிகர்கள் தயங்கும் அளவுக்கு தோற்றத்தில் இருந்த அவரை முதலில் நடிக்க வைத்தவர் நடிகர் ராஜ்கிரண். அதன்பிறகு சின்னக்கவுண்டர் படத்தில், டைரக்டர் ஆர்வி உதயகுமாரிடம் சிபாரிசு செய்து, தன்னுடன் குடை பிடிக்கும் கேரக்டரில் நடிக்க வைத்தவர் கேப்டன் விஜயகாந்த். அதன்பிறகு தேவர் மகன் படத்தில் இசக்கி கேரக்டர் தந்து நடிக்க வைத்தவர் நடிகர் கமல்ஹாசன்.
இப்படி ராஜ்கிரண், விஜயகாந்த், கமல்ஹாசன் போன்றவர்கள் ஆரம்பக்கட்டத்தில் செய்த உதவியால்தான் வடிவேலு, பிற்காலத்தில் காமெடியில் மிகப்பெரிய நடிகராக வளர்ந்தார். படத்தில் நடிக்க ஒரு நாள் சம்பளமாக ரூ. 12 லட்சம் வாங்கும் அளவுக்கு சினிமாவில் அவரது மார்க்கெட் தாறுமாறாக உயர்ந்தது. இன்று வடிவேலு பல கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரராக ராஜபோக வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
ஆனால், தன்னை ஏற்றிவிட்ட ஏணிகளில் ஒருவரான விஜயகாந்த் குறித்து அவர் தரக்குறைவாக விமர்சனம் செய்து, தன் பெயரை கெடுத்துக்கொண்டார். தேமுதிக தலைவராக கேப்டன் இருந்த போது, திமுகவின் பேச்சை கேட்டுக்கொணடு மேடைகளில் அவரை இழிவாக பேசி, ரசிகர்களிடம் கெட்ட பெயரை சம்பாதித்துக்கொண்டார். கடந்த டிசம்பர் மாதம் அவர் மறைந்த போதும், இரங்கல் செய்தி வெளியிடாமல் நேரில் அஞ்சலி செலுத்த வராமல், ரசிகர்களின் கடுமையான கோபத்துக்கு ஆளானார்.
இந்நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக நடிகர் வடிவேலு தேர்தல் பிரசாரம் செய்கிறார். இதில் விருதுநகர் தொகுதியில் மட்டும் நான் பிரசாரம் செய்ய மாட்டேன், என திமுகவிடம் பிடிவாதமாக மறுத்திருக்கிறார். காரணம், அங்கு கேப்டன் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் வேட்பாளராக நிற்கிறார். இனியும் கேப்டன் குடும்பத்தின் சாபம் தனக்கு வேண்டாம் என வடிவேலு கருதி மறுத்திருக்கிறார். இப்பவாவது புத்தி வந்ததே, என ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றனர்.





