- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவரு ஆரம்பிச்சாரு, இவரு ஆரம்பிச்சாரு… நடிகர் விஜய் கட்சி குறித்து கிண்டலாக பதில் சொன்ன வடிவேலு...

அவரு ஆரம்பிச்சாரு, இவரு ஆரம்பிச்சாரு… நடிகர் விஜய் கட்சி குறித்து கிண்டலாக பதில் சொன்ன வடிவேலு – டென்சன் ஆன விஜய் ரசிகர்கள்

- Advertisement -

நடிகர் வடிவேலு, ஒரு காலத்தில் இவர் நடித்த திரைப்படங்களில் அவரது டயலாக் டெலிவரியே பயங்கரமாக ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும். ஆனால் சமீபகாலமாக அவர் பேசுவதே பலருக்கும் எரிச்சலை, கடும் அதிருப்தியை கிளப்பி விடுகிறது. சமீபத்தில் விஜய் குறித்த அவரது கிண்டலான பேச்சு விஜய் ரசிகர்களை, தொண்டர்களை கடுமையாக வெறுப்பேற்றி உள்ளது.

கடந்த 1990களில் நடிகர் வடிவேலு நல்ல நகைச்சுவை கலைஞனாக தமிழ் சினிமாவில் வளர்ந்தார். ஒரு கட்டத்தில் தினமும் ரூ. 12 லட்சம் சம்பளம் வாங்குகிற அளவுக்கு மிகப்பெரிய காமெடி நடிகராக உயர்ந்தார். சந்திரமுகி படத்தில் நடிக்க ரஜினி கால்ஷீட் தந்த போது, வடிவேலு கால்ஷீட் இருக்குதா என கேட்டுடுங்க என டைரக்டர் பி.வாசுவிடம் சொன்னாராம் ரஜினிகாந்த்.

- Advertisement -

அந்தளவுக்கு பெரிய நடிகர்கள் படத்தில் கூட நடிக்க தேதி கொடுக்க முடியாத அளவுக்கு மிக அதிகமான படங்களில் நடித்துக்கொண்டிந்த வடிவேலு, ஒரு கட்டத்தில் கதாநாயகனாகவும் மாறினார். இம்சை அரசன் 23ம் புலிகேசி, தெனாலிராமன் போன்ற படங்களில் நடித்தார். இந்த 2 படங்களுமே அவரது நடிப்பில் வெற்றி பெற்றன. இதில் 2 படங்களிலுமே அவர் டபுள் ரோல் செய்திருந்தார். இரண்டுமே மன்னர் கதைதான்.

ஆனால் தம்பி ராமையா டைரக்ட் செய்த இந்திரலோகத்தில் நா. அழகப்பன் படம் பெரிய வெற்றியை பெறவில்லை. இதில் எமதர்ம ராஜாவாக ஒரு கேரக்டரும், அழகப்பன் என்ற மானுட வாசியாக ஒரு கேரக்டரும் என இரட்டை வேடத்தில் வடிவேலு நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடம் போதிய வரவேற்பை பெறவில்லை.

- Advertisement -

இதற்கிடையே சில பிரச்னைகளால் 10 ஆண்டுகளுக்கு மேலாக நடிக்காமல் இருந்த வடிவேலு இப்போதுதான் சில படங்களில் நடித்து வருகிறார். நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், எலி, சந்திரமுகி 2, மாமன்னன் போன்ற படங்களில் நடித்த நிலையில், இதில் மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் படத்தில் மட்டுமே வடிவேலு பெரிய வரவேற்பை பெற்றார். மற்ற படங்களில் வடிவேலு நடிப்பு எடுபடவில்லை.

சமீபத்தில், ராமநாதபுரம் பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்ற நடிகர் வடிவேலுவிடம், நடிகர் விஜய் அரசியல் வருகை குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு வடிவேலு, நடிகர் விஜய் கட்சி துவங்கியிருக்கிறார், அவ்வளவுதானே, அதற்கு நான் என்ன சொல்வது, சரத்குமார் கட்சி ஆரம்பித்திருக்கிறார், டி ராஜேந்தர் கட்சி ஆரம்பித்திருக்கிறார். இப்படி எத்தனையோ நடிகர்கள் கட்சி ஆரம்பித்திருக்கிறார்கள். இப்போது விஜய் கட்சி துவங்கியிருக்கிறார். இதற்கு நான் என்ன சொல்வது, என்று எகத்தாளமாக பதில் பேசியிருப்பது விஜய் ரசிகர்களை பயங்கரமாக கடுப்படைய செய்துள்ளது.

- Advertisement -

சற்று முன்