- Advertisement -
Homeபொழுதுபோக்குகல்கி படத்தில் கமல்ஹாசன் கேரக்டரில் முதலில் நடிக்க இருந்த பிரபல நடிகர் யார் தெரியுமா? போடு...

கல்கி படத்தில் கமல்ஹாசன் கேரக்டரில் முதலில் நடிக்க இருந்த பிரபல நடிகர் யார் தெரியுமா? போடு வெடிய, அவரும் நடிப்பில் அசகாய சூரனாச்சே… அப்புறம் என்னாச்சு?

- Advertisement -

தமிழ் சினிமாவில் எந்தவிதமான கேரக்டரில் நடித்தாலும் அந்த நடிப்பை அவரை விட சிறப்பாக நடிக்க யாருமில்லை என்று சொல்லும் அளவுக்கு நடிப்பில் கலைஞானியாகவும், உலக நாயகனாகவும் போற்றப்படும் ஒரே நடிகர் கமல்ஹாசன்தான். அவர் நடித்த படங்கள் சில தோல்வியடைந்திருந்தாலும், அந்த படங்களிலும் அவரது நடிப்பு ஜெயித்திருக்கும்.

சினிமா என்பது கூட்டுமுயற்சி. இதில் கதையம்சம் சரியாக இல்லாமல் ஒரு படம் தோற்றுப் போகலாம். இசையால் படம் அதிருப்தியளிக்கலாம். திரைக்கதை சொதப்பலாக மாறலாம். சொல்ல வந்த மையக்கருத்து ரசிகர்களுக்கு பிடிக்காமல் போகலாம். ஆனால் அத்தகைய படங்களில் கூட கமல் என்ற அற்புத கலைஞனின் நடிப்பு பாராட்டுக்குரியதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

- Advertisement -

சமீபத்தில் இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியான பான் இந்தியா படம் கல்கி 2898 ஏடி. முதல் பாகமாக வெளியான இந்த படம், 2வது பாகமாகவும் உருவாகி, அடுத்த ஆண்டில் வெளிவர வாய்ப்பிருக்கிறது. இந்த படத்தில் நாயகனாக பிரபாஸ் நடித்துள்ளார். அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் கமல்ஹாசனின் நடிப்பு சிறிது நேரமே என்றாலும், அவர் உலக நாயகன் என்பதை அவர் வந்த சில காட்சிகளிலேயே நிரூபித்து விட்டார் என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அதே நேரத்தில் கல்கி 2ம் பாகத்தில் கமல்ஹாசனின் நடிப்பு பகுதிகளில் படம் முழுவதுமே வரும் என்றும் கூறுகின்றனர்.

- Advertisement -

மகாபாரத கதையை நவீன காலத்துடன் சம்பந்தப்படுத்தி காட்டிய இந்த படத்தில் வந்த கதாபாத்திரங்கள் குறித்து பல்வேறு விமர்சனங்களும் இருக்கின்றன. படம் பார்த்த பலரும் புரியவில்லை என்ற விமர்சனத்தை வைத்தாலும் படம் ரூ. 1100 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்போது கல்கி 2898 ஏடி படம் குறித்த ஒரு லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படத்தில் அஸ்வத்தாமன் கேரக்டரில் அமிதாப் பச்சன். கர்ணன் கேரக்டரில் பிரபாஸ் நடிப்பதாக துவக்கத்திலேயே முடிவு செய்யப்பட்டது. ஆனால் யாஸ்கின் கேரக்டரில் யார் நடிப்பது என்பது முடிவாகவில்லை. அப்போது இந்த கேரக்டருக்கு முதலில் பரிசீலிக்கப்பட்டது மலையாள நடிகர் மோகன்லால், ஆனால் அதற்கு பிறகு, கமல்ஹாசன்தான் இதற்கு சரியாக இருப்பார் என்று முடிவு செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்