- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்தி சினிமாவுக்குள் வந்த போது அந்த விஷயத்தில் ரொம்பவும் பயந்துவிட்டேன் - சீக்ரெட்டை ஓபனாக சொன்ன...

இந்தி சினிமாவுக்குள் வந்த போது அந்த விஷயத்தில் ரொம்பவும் பயந்துவிட்டேன் – சீக்ரெட்டை ஓபனாக சொன்ன நடிகை ராஷ்மிகா மந்தனா!

- Advertisement -

கன்னட சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தொடர்ந்து கீதா கோவிந்தம் புஷ்பா புஷ்பா 2 உள்ளிட்ட படங்கள் அவருக்கு பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தன. தமிழில் அவர் நடித்த வாரிசு சுல்தான் போன்ற படங்கள் சரியாக போகாத நிலையில் தெலுங்கு இந்தியில் அவர் அதிக படங்களில் நடித்தார்.

இந்திய சினிமாவில் நேஷனல் க்ரஷ் என அழைக்கப்படும் ராஸ்மிகா மந்தனா சமீபத்தில் தான் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா ரெட்டியை காதல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணத்திற்கு பிறகும் பிஸியாக இருக்கும் நடிகைகளில் ஒருவராக ராஷ்மிகா மந்தனா இருந்து வருகிறார்.

- Advertisement -

தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக ராஷ்மிகா நடித்து வருகிறார். குறிப்பாக பாலிவுட்டிலும் முன்னணி நட்சத்திர நாயகியாக ராஷ்மிகா மந்தனா உருவெடுத்திருக்கிறார். உச்ச நட்சத்திர நாயகியான நடிகை தீபிகா படுகோனே இடத்துக்கு வருவதே அவரது குறிக்கோள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்ற நடிகை ராஷ்மிகா மந்தனா பேசியதாவது, தென்னிந்திய சினிமாவில் இருந்து முற்றிலும் வேறுபட்ட பாலிவுட் திரையுலகத்துக்குள் சென்றபோது வழக்கமான எந்த ஒரு அமைப்பிற்கும் சிக்காமல் இயங்கிய தருணமே என்னை பொறுத்தவரை மிகவும் சிறப்பானது.

- Advertisement -

அப்போது மற்றவர்கள் ஒரு தெளிவான திட்டத்துடன் இருப்பது போல் தோன்றியதால் எனக்கு கொஞ்சம் பயமாக இருந்தது. ஆனால் என் உள்ளுணர்வை நம்பி பயணித்தேன். இப்போது திரும்பிப் பார்க்கும்போது மற்றவர்களிடமிருந்து நம்மை வேறுபடுத்தி காட்டும் விஷயங்களே நமக்கு மிகப்பெரிய பலமாக மாறுகின்றன என்பதை உணர்ந்தேன்.

மேலும் ஃபேஷனை பொருத்தவரை எனக்கு கம்ஃபோர்ட் தான் முதன்மையானது. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதற்காக வாழாமல் தனக்கே உரித்தான பாணியில் சொந்த அடையாளத்தை வெளிப்படுத்துவதே உண்மையான அழகு என்று நடிகை ராஷ்மிகா மந்தனா அந்த நிகழ்ச்சியில் வெளிப்படையாக பேசியிருக்கிறார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்