நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருகிறார். கடந்த 1990களில் துவங்கி, 2010ம் ஆண்டு வரை தமிழில் பல காமெடி படங்களில் நடித்து பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர். குறிப்பாக சிங்கார வேலன் சின்னக்கவுண்டர் நான் பெத்த மகனே வரவு எட்டணா செலவு பத்தணா விரலுக்கத்த வீக்கம் போன்ற படங்கள் வடிவேலுக்கு நல்ல அடையாளத்தை கொடுத்த படங்களாக அமைந்தன.
குறிப்பாக இயக்குனர் வி சேகர் படங்கள் காமெடி நடிகர்களுக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தரும். அந்த வகையில் கவுண்டமணி செந்திலை போலவே வடிவேலு விவேக் போன்றவர்களுக்கும் வி சேகர் படங்கள் நல்ல வெற்றியை ரசிகர்களிடம் பெற்றுத் தந்திருக்கின்றன.
ரஜினி கமல் விஜய் சூர்யா தனுஷ் விக்ரம் ஜெயம் ரவி அருண் விஜய் கரண் என பல முன்னணி நடிகர்களுடன் காமெடி ரோலில் நடித்த வடிவேலு, ஒரு நாளைக்கு ரூ. 15 லட்சம் வரை சம்பளம் வாங்கும் அளவுக்கு பெரிய ஸ்டார் நடிகராக காமெடியில் கொடி கட்டிப் பறந்தார். அப்போது இம்சை அரசன் 23ம் புலிகேசி இந்திரலோகத்தில் நா அழகப்பன் தெனாலி போன்ற படங்களில் ஹீரோவாகவும் நடித்தார்.
இதில் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு இரட்டை வேடங்களில் நடித்த இம்சை அரசன் 23ம் புலிகேசி மிகப்பெரிய வெற்றிப் படமாக இருந்தது. தெனாலி படமும் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் தம்பி ராமையா இயக்கிய இந்திரலோகத்தில் நா அழகப்பன் மற்றும் எலி ஆகிய படங்கள் வடிவேலுக்கு பெரிய வெற்றியை, வரவேற்பை தரவில்லை.
இந்த சூழலில் 10 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு நடிகர் வடிவேலு இப்போது மீண்டும் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். சுந்தா் சி இயக்கத்தில் கேங்கர்ஸ் என்ற படத்தில் வடிவேலு படம் முழுவதும் வருவது போன்ற முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். சுந்தர் சி வடிவேலு கூட்டணி பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தில் இணைவது, வடிவேலுவுக்கு செகண்ட் ரவுண்ட் பிக்கப்புக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.
நடிகர் சூர்யாவுடன் வடிவேலு பல படங்களில் காமெடி ரோலில் நடித்திருக்கிறார். சில்லுன்னு ஒரு காதல் ஆதவன் படங்களில் வடிவேலு காமெடி பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இப்போது சூர்யாவின் தம்பி நடிகர் கார்த்தியுடன் முதன்முறையாக வடிவேலு இணைந்து நடிக்கிறார். சர்தார் 2 படத்துக்கு பிறகு நடிகர் கார்த்தி, டாணாக்காரன் பட இயக்குனர் தமிழ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் காமெடி ரோலில் வடிவேலு நடிப்பது உறுதியாகி உள்ளது.





