- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஷாலின் இந்த உடல் நிலைக்கு காரணம் இயக்குனர் பாலா தான்... பிரபல சினிமா விமர்சகர் கூறிய...

விஷாலின் இந்த உடல் நிலைக்கு காரணம் இயக்குனர் பாலா தான்… பிரபல சினிமா விமர்சகர் கூறிய கருத்தால் பரபரப்பு…

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர் விஷால். ஆக்சன் ஹீரோவாக வலம் வந்த அவர், சண்டக்கோழி திமிரு தாமிரபரணி இரும்புத்திரை உட்பட ஏராளமான வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கிறார். அண்மைக்காலமாக தோல்வி திரைப்படங்களை கொடுத்துக் கொண்டிருந்த அவருக்கு, மிகப்பெரிய திருப்புமுனையாக மார்க் ஆண்டனி திரைப்படம் அமைந்தது.

 

- Advertisement -

விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படம் வரவேற்பை பெற்றது. 100 கோடி ரூபாய் வசூலையும் குவித்தது. இதற்குப் பிறகு அவர் ஹரி இயக்கத்தில் நடித்த ரத்னம் திரைப்படம் அந்தளவு பெரிதாக ஓடவில்லை. இப்படியான சூழலில் விஷால் நடித்த மதகஜ ராஜா திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது.

 

- Advertisement -

இந்த திரைப்படம் 2013 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. கமர்சியல் படங்களின் கிங் சுந்தர் சி தான் இதனை இயக்கி இருந்தார். இதில் அஞ்சலி வரலட்சுமி சரத்குமார் சந்தானம் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட ஏராளமான நடித்து இருக்கிறார்கள். ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் இதனை தயாரித்தது. ஆனால் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இந்த திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசாகாமல் முடங்கி போனது.

 

இப்படியான சூழலில் தான் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இதனை தியேட்டரில் கொண்டு வரும் முயற்சியில் இறங்கி இருக்கிறது படக்குழு. அதன்படி வரும் 12ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ப்ரொமோஷன் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

 

அதில் விஷாலின் தோற்றத்தை பார்த்து பலரும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். மெலிந்த உடலுடன் காட்சியளித்த விஷால், ஒரு நடுக்கத்துடனே பேசினார். அதுமட்டுமல்லாமல் அவர் உட்கார்ந்திருந்த போதும் கண்களில் கண்ணீர் வழிந்தது. இதுகுறித்து விளக்கம் அளித்த மருத்துவமனை நிர்வாகம், அவர் வைரல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவர் சிகிச்சையின் கீழ் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

 

ஆனால் சினிமா விமர்சகரான வலைப்பேச்சு அந்தணன் புதிய காரணத்தை கூறியிருக்கிறார். அதில், பாலா இயக்கிய அவன் இவன் திரைப்படத்தின் போது விஷாலை மாறு கண்ணில் நடிக்க கூறினார்கள். இதற்காக கண் பகுதியை இழுத்து தைத்து மருத்துவம் மேற்கொள்ளப்பட்டது. இதனால் ஒற்றைத் தலைவலியால் கடுமையாக பாதிக்கப்பட்டார் விஷால். அதிலிருந்து மீள்வதற்காக சில தீய பழக்கங்களையும் அவர் எடுத்துக் கொண்டார். இதுதான் அவரது உடல் நிலை தற்போது மோசமடைய காரணம் என்று கூறி இருக்கிறார். அவரது இந்தப் பேச்சு திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

சற்று முன்