- Advertisement -
Homeபொழுதுபோக்குவணங்கான் படப்பிடிப்பில் நடந்த விநோதம், பாலா படம் மாதிரியே இல்லையே, திடீரென உள்ளே நுழைந்த பிரபலத்தால்...

வணங்கான் படப்பிடிப்பில் நடந்த விநோதம், பாலா படம் மாதிரியே இல்லையே, திடீரென உள்ளே நுழைந்த பிரபலத்தால் ஏற்பட்ட மாற்றமோ, என்னவா இருக்கும்?

- Advertisement -

பாலா இயக்கி வரும் “வணங்கான்” திரைப்படம் முதலில் சூர்யாவை வைத்துதான் தொடங்கப்பட்டது. இதில் கிரீத்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்து வந்தார். ஆனால் இடையில் சூர்யாவிற்கும் பாலாவிற்கும் இடையே மனஸ்தாபங்கள் ஏற்பட்டதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் அந்த செய்திகளில் உண்மையே இல்லை என்று கூறப்பட்டது.

ஆனால் சில நாட்களிலேயே உண்மை வேறு ரூபமாக வெளிவந்தது. அதாவது “வணங்கான்” திரைப்படத்தில் இருந்து சூர்யா வெளியேறிவிட்டார். அத்திரைப்படத்தை சூர்யாவின் 2D நிறுவனம்தான் தயாரித்தும் வந்தது. சூர்யா அத்திரைப்படத்தில் இருந்து வெளிவந்தபோது 2D நிறுவனமும் வெளிவந்துவிட்டது.

- Advertisement -

அதன் பிறகு “வணங்கான்” திரைப்படத்தை தனது சொந்த செலவில் உருவாக்க வேண்டிய நிலை பாலாவிற்கு வந்தது. இதில் அருண் விஜய் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமானார். அதன் பின் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது.

இந்த நிலையில் சில நாட்களாகவே “வணங்கான்” திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக மும்முரமாக நடைபெற்று வருவதாக செய்திகள் வெளிவந்தன. அதாவது எப்போதும் பாலா தனது திரைப்படத்தின் படப்பிடிப்பை மிகவும் மெதுவாகத்தான் நடத்துவார்.

- Advertisement -

ஆனால் “வணங்கான்” திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளம் பாலா படத்தின் படப்பிடிப்புத் தளம் போலவே இல்லையாம். மிக வேகமாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறதாம். இந்த நிலையில் தற்போது இத்திரைப்படம் குறித்த ஒரு முக்கிய தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது சூர்யா வெளியேறிய பின் பாலா தயாரிப்பு பணிகளை மேற்கொண்டு வந்தார். ஆனால் தற்போது தயாரிப்பு பணிகள் வேறு ஒரு தயாரிப்பாளரின் கைகளுக்குச் சென்றுவிட்டதாம். “மாநாடு” திரைப்படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சிதான் தற்போது “வணங்கான்” திரைப்படத்தை தயாரித்து வருகிறாராம். இதனால்தான் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெறுவதாக பலரும் கூறுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்