- Advertisement -
Homeபொழுதுபோக்குதிருச்சி மற்றும் அரியலூரில் நேற்று மக்களை நேரில் சந்தித்த தவெக தலைவர் விஜய் - இன்று...

திருச்சி மற்றும் அரியலூரில் நேற்று மக்களை நேரில் சந்தித்த தவெக தலைவர் விஜய் – இன்று அறிக்கை வெளியிட்டு வருத்தம் தெரிவித்த தளபதி!

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக உள்ள நடிகர் விஜய் இப்போது தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். விக்கிரவாண்டி மற்றும் மதுரையில் 2 மாநில மாநாடுகளை வெற்றிக்கரமாக நடத்திக் காட்டிய நடிகர் விஜய் இப்போது மக்கள் சந்திப்பு பயணத்தையும் துவங்கி விட்டார். முதல் நாளான நேற்று திருச்சி மற்றும் அரியலூரில் மக்களை சந்தித்து பிரசாரம் செய்தார்.

இதையடுத்து இன்று நடிகர் விஜய் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது, “வாகை சூடும் வரலாறு திரும்புகிறது, உங்க விஜய் நான் வரேன்” என்னும் நமது மக்கள் சந்திப்புப் பயணம், தித்திப்புடன் திருச்சியில் நேற்று தொடங்கியது. தொடர்ந்து நம் மக்கள் சந்திப்பானது அரியலூர், குன்னம் வரை நீண்டது.

- Advertisement -

அனைத்து இடங்களிலும் மக்களின் தன்னெழுச்சியான பேரன்பும் பேராதரவும் மனம் நெகிழச் செய்தது. உங்கள் அனைவருக்கும் கோடானு கோடி நன்றி. இத்துணை உணர்வு மிக்க மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் சார்ந்த பல்வேறு பணிகளை மேற்கொண்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான மாவட்டப் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை உரித்தாக்குகின்றேன்.

வழிநெடுக மிக நீண்ட தூரம் கூடியிருந்த மக்கள் திரளைக் கடந்து செல்லவே இயலாத நிலையால், நேற்று நள்ளிரவு கடந்தும் பெரம்பலூரில் நம்மைச் சந்திக்கக் கூடி இருந்த பல்லாயிரக்கணக்கான நம் உறவுகளைக் காண இயலாத ஒரு சூழல் ஏற்பட்டது.

- Advertisement -

எனவே அனைவரது நலன் கருதி, மிகுந்த மன வருத்தத்துடன், மீண்டும் இன்னொரு நாள் பெரம்பலூர் வருவதென முடிவெடுக்க வேண்டிய நிலை உண்டானது. பேரன்பு கொண்டு காத்திருந்த பெரம்பலூர் மக்களிடம் என்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். நிச்சயமாக உங்களைச் சந்திக்க, மீண்டும் வருவேன் என்று அந்த அறிக்கையில் நடிகர் விஜய் கூறியிருக்கிறார்.

முதல் நாள் சுற்றுப்பயணமாக நேற்று காலை 9 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த நடிகர் விஜய், விமான நிலையத்தில் இருந்து திருச்சியில் உள்ள மரக்கடை என்ற பகுதிக்கு வரவே மதியம் 2 மணி ஆகி விட்டது. வழிநெடுக மக்கள் கூட்டத்தில் அவரது பிரசார வாகனம் நகர்ந்து நகர்ந்து வந்து சேர தாமதம் ஆனால் பெரம்பலூரில் அவரது பிரசார பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்