- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய்க்கு அதை கொடுக்கணும். எனக்கும் அந்த ஆசை இருக்கு - சின்னத்திரை நயன்தாரா வாணி போஜன்...

விஜய்க்கு அதை கொடுக்கணும். எனக்கும் அந்த ஆசை இருக்கு – சின்னத்திரை நயன்தாரா வாணி போஜன் சொன்ன ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

நடிகை வாணி போஜனுக்கு சின்னத்திரை நயன்தாரா என்ற பெயர் உண்டு. ஏனெனில், சீரியல் நடிகைகளில் அசத்தலான அழகில் இருப்பவர் என்பதால், ரசிகர்களாக அவருக்கு கொடுத்த பட்டம் இது. தெய்வ மகள் சீரியல் மூலம் மக்கள் மனங்களை கவர்ந்தவர். தொடர்ந்து பல சீரியல்களில் வாணி போஜன் நடித்திருக்கிறார்.

ஆஹா, மாயா, லட்சுமி வந்தாச்சு, தெய்வ மகள் போன்ற சீரியல்களில் நடித்ததால், மக்கள் மத்தியில் நல்ல அறிமுகமும் வரவேற்பும் வாணி போஜனுக்கு கிடைத்தது. வாணி போஜன் தெய்வமகள் சீரியலில் நடித்த சத்யா கேரக்டர் பரபரப்பாக பேசப்பட்டது. தாசில்தார் சத்யா என்ற கேரக்டரில் நடித்த அவர், அவரது மாமனார் வீடான ஜெய்ஹிந்த் விலாசை காப்பாற்றுவதுதான் சீரியலின் மையக்கருவாக, விறுவிறுப்பாக சென்றது.

- Advertisement -

சீரியலில் நடிக்க வருவதற்கு முன், கிங் பிஷ்ஷர் விமானத்தில் ஏர்ஹோஸ்டலாக 3 ஆண்டுகள் வாணி போஜன் பணிசெய்திருக்கிறார். அதற்கு பின்பே, விளம்பரங்களில் மாடலாக நடித்திருக்கிறார். அவரது அழகான வடிவம் கண்டு அவருக்கு சீரியல்களில் நடிக்க வாய்ப்பு தேடி வந்திருக்கிறது.

ஓ மை கடவுளே, மிரள், லாக்கப், பாயும் ஒளி நீ எனக்கு, மகான், செங்களம், லவ் போன்ற படங்களில் நடித்த வாணி போஜன் ட்ரிப்ளஸ் என்ற வெப் சீரிஸ் ஒன்றில் நடிகர் ஜெய்யுடன் நடித்தார். அதனால் தொடர்ந்து ஜெய்யுடன் நெருக்கம் ஏற்பட்டு ஜெய்யும், வாணி போஜனும் லிவிங் டூ ரிலேசன்ஷிப்பில் இருந்ததாகவும், சில ஆண்டுகளுக்கு பிறகு கேரியர் கருதி இருவரும் பிரேக்கப் செய்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

வாணி போஜன், சீரியல் நடிகை என்பதால் அவரை ஹீரோயினாக ஏற்றுக்கொள்ள தமிழில் பல முன்னணி நடிகர்கள் மறுத்திருக்கின்றனர். டிவி சீரியல் நடிகையை எனக்கு ஜோடியாக, ஹீரோயினாக நடிக்க வைத்தால் என் இமேஜ் என்னாவது என்று கூறி பலரம் தன்னை ரிஜக்ட் செய்ததாக, வாணி போஜன் ஒரு நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் விஜய் அரசியல் வருகை குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை வாணி போஜன், நடிகர் விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவரும் என்ன செய்கிறார் என்பதை பார்க்க முடியும். எனக்கு அரசியல் ஆசை இருக்கிறது என்றும் அந்த நேரத்தில் தன் விருப்பத்தை கூறியிருக்கிறார் நடிகை வாணிபோஜன்.

- Advertisement -

சற்று முன்