- Advertisement -
Homeபொழுதுபோக்குவீர தீர சூரன் திரைப்படம் முன்பதிவில் மட்டும் பார்த்த தொகை எவ்வளவு தெரியுமா... விவரம்... இதோ...

வீர தீர சூரன் திரைப்படம் முன்பதிவில் மட்டும் பார்த்த தொகை எவ்வளவு தெரியுமா… விவரம்… இதோ உங்களுக்காக….

- Advertisement -

சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் வீர தீர சூரன் திரைப்படம் மார்ச் 27 அதாவது நாளை உலகமெங்கும் வெளியாகிறது. முதலில் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை நேரடியாக எடுத்திருக்கிறார்கள். அருண்குமார் தான் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். துஷாரா விஜயன் கதாநாயகியாக வருகிறார். போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் எஸ் ஜே சூர்யாவுக்கு வில்லன் கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது.

இதுபோக மலையாள நடிகர் சூராஜும், வீர தீர சூரன் படத்தில் இருக்கிறார். கைதி திரைப்படத்தைப் போல இதனையும் ஒரே இரவில் நடப்பது போன்று படமாக்கி இருக்கிறார்கள். விக்ரம் மளிகை கடைக்காரர் கெட்டப்பில் வருகிறார். அவருக்கு மனைவியாகத்தான் துஷாரா நடித்திருக்கிறார்.

- Advertisement -

மறைமுகமாக விக்ரம் கேங்ஸ்டர் ஆக இருப்பதும், ஒரு நாள் இரவில் நடக்கும் பரபரப்பான சம்பவங்களும்தான் இந்த திரைப்படத்தின் கதை என்று கூறப்படுகிறது. அதற்கு ஏற்றபடி தான் இதன் காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்தி இருக்கிறாராம் இயக்குனர் அருண்குமார். பண்ணையாரும் பத்மினியும் திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆகி இருந்த இவர் சேதுபதி சிந்துபாத் ஆகிய திரைப்படங்களை இயக்கியிருந்தார்.

கடைசியாக அருண்குமார் இயக்கத்தில் வெளிவந்த சித்தா திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்றது. இதன் தொடர்ச்சியாகவே தற்போது அவர் விக்ரமுடன் கை கோர்த்து இருக்கிறார். படத்தில் ஆக்சன் காட்சிகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது அதன் டீசர் மற்றும் ட்ரெய்லரை பார்க்கும் பொழுதே தெரிகிறது.

- Advertisement -

ரத்தம் தெறிக்க தெறிக்க காட்சிகளை படமாக்கி இருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் மிரட்டலான இசையை கொடுத்திருக்கிறார். இந்த திரைப்படம் ரிலீஸ் ஆன பிறகு, வீர தீர சூரனின் முதல் பாகம் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. படத்தை ஆரம்பக் காட்சியில் இருந்து பாருங்கள் என்று ஏற்கனவே அதில் இடம்பெற்றிருக்கும் சுராஜ் கூறியிருந்தார்.

இதே போல் படத்தின் கிளைமாக்ஸில் தூள் திரைப்படத்தில் இடம்பெற்ற மதுர வீரன் தானே பாடல் வருவதாக சொல்கிறார்கள். இப்படியான சூழலில், வீரதீரசூரன் இரண்டாம் பாகம் முன்பதிவு மட்டும் மூன்று கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விக்ரம் போன்ற பெரிய நட்சத்திரத்திற்கு இந்த தொகை சற்று குறைவு தான் என்றாலும், படம் ரிலீஸ் ஆன பிறகு வசூல் அதிகரிக்கும் என்று பலரும் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

- Advertisement -

சற்று முன்