- Advertisement -
Homeபொழுதுபோக்குதியேட்டருக்கு படம் பார்க்க வருபவர்கள் இப்படி எல்லாம் செய்யலாமா…? - வருத்தப்பட்டு பேசிய வீர தீர...

தியேட்டருக்கு படம் பார்க்க வருபவர்கள் இப்படி எல்லாம் செய்யலாமா…? – வருத்தப்பட்டு பேசிய வீர தீர சூரன் பட இயக்குனர் அருண்குமார்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கமர்ஷியல் என்ற பெயரில் ஹீரோயிஷம் காட்டும் பில்டப் கதைகளை இயக்குவதே பெரிய இயக்குனர் என்ற இமேஜை பலருக்கும் தந்து விடுகிறது. குறிப்பாக ரஜினி கமல் விஜய் அஜீத்குமார் படங்கள் என்றாலே கதை காணாமல் போய் கதாநாயகன் மட்டுமே முன்னிலைப்படுத்தப்படுகிறார்.

இது அந்த நடிகரின் ரசிகர்களுக்கு திருப்தி தருமே அன்றி நல்ல படம் பார்க்க வரும் பொதுவான ரசிகர்களை திருப்தி செய்யாது. வில்லன்கள் ரவுடியிசம் கேங்ஸ்டா்ஸ் என ரத்தம் கத்தி துப்பாக்கி வெடி சத்தம் என படம் முழுக்க ஹீரோ வில்லனை மையப்படுத்திய பழிவாங்கல் படங்களை பார்த்து பார்த்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சலித்து போய் விட்டது.

- Advertisement -

ஹீரோயிசம் நிறைந்த படங்களை பார்த்து பார்த்து பலருக்கும் புளித்துப் போய் விட்ட நிலையில்தான் பார்க்கிங் குட்நைட் குடும்பஸ்தன் சித்தா மகாராஜா பண்ணையாரும் பத்மினியும் லப்பர் பந்து போன்ற படங்கள் வெளியாகி ரசிகர்களை ரிலாக்ஸ் செய்கின்றன. சினிமாவில் கற்பனையை திரையில் காட்டாமல் யதார்த்தத்தை திரையில் கொண்டு வந்த இயக்குனர்களை ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.

பண்ணையாரும் பத்மினியும் சித்தா படங்களை இயக்கிய இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் வீர தீர சூரன். விக்ரம் துஷாரா விஜயன் எஸ்ஜே சூர்யா நடித்த இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதுவரை 40 கோடி ரூபாய்க்கு வசூலித்துளளது.

- Advertisement -

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய வீர தீர சூரன் பட இயக்குனர் அருண்குமார் கூறியதாவது, தியேட்டரில் படம் போட்ட பிறகு படத்தின் காட்சிகளை செல்போனில் படம் பிடிப்பது, அதை ஸ்டேட்டஸ் வைப்பது, இடையில் படத்தை கவனிக்காமல் ஸ்நாக்ஸ் சாப்பிடுவது படம் பார்க்க வரும் பலரது பழக்கமாக உள்ளது.

தியேட்டரில் படம் ஆரம்பித்த பிறகு செல்போனில் டார்ச் அடித்துக் கொண்டே சீட்டை தேடுவது போன்ற ரசிகர்களின் செயல்கள் எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. ரசிகர்கள் படத்தை உன்னிப்பாக கவனித்தால்தான் கதையோட்டம் புரியும். இது போன்ற இடையூறுகள் படத்தில் வரும் காட்சிகளின் ரசனையை வெகுவாக குறைத்து விடும் என்று இயக்குனர் அருண்குமார் வருத்தமாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்