- Advertisement -
Homeபொழுதுபோக்குவேலு நாயக்கர் கதாபாத்திரத்தின் சீக்ரெட் இதுதான், அந்த அரசியல்வாதியை பார்த்துதான் கமலே நடித்தார்- அரிய தகவலை...

வேலு நாயக்கர் கதாபாத்திரத்தின் சீக்ரெட் இதுதான், அந்த அரசியல்வாதியை பார்த்துதான் கமலே நடித்தார்- அரிய தகவலை பகிர்ந்த எம்.எஸ்.பாஸ்கர்

- Advertisement -

கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கிய “நாயகன்” திரைப்படம் தமிழ் சினிமாவின் கிளாசிக் திரைப்படமாகும். காலத்தை தாண்டியும் பேசப்படக்கூடிய ஒரு திரைப்படமாக இது திகழ்ந்து வருகிறது. 1980களில் தமிழ் சினிமாவின் டிராக்கையே மாற்றிய திரைப்படம் இது என்று தாராளமாக கூறலாம். அந்தளவுக்கு திரைக்கதையிலும் சரி, மேக்கிங்கிலும் சரி, மிகப் புதுமையான விஷயங்களை கையாண்டிருந்தார் மணிரத்னம்.

அது மட்டுமல்லாது பி.சி.ஸ்ரீராமின் கேமரா கோணங்கள் அனைத்து காட்சிகளிலும் தனித்துவமாக இருந்தது. இன்னும் எவ்வளவு வருடங்கள் ஆனாலும் இப்படி ஒரு திரைப்படத்தை யாராலும் கொடுக்க முடியாது என்று பல சினிமா ரசிகர்கள் “நாயகன்” படத்தை பாராட்டுவது உண்டு.

- Advertisement -

இத்திரைப்படத்தில் கமல்ஹாசன் ஏற்று நடித்திருந்த வேலு நாயக்கர் என்ற கதாபாத்திரம் பிற்காலத்தில் வந்த பல டான் கதாபாத்திரங்களுக்கு முன்னோடியாக இருந்தது. இதில் கமல்ஹாசன் இளம் வயது கதாபாத்திரம், வயதான கதாபாத்திரம் என இரண்டு விதமாக நடித்திருப்பார். இந்த இரண்டு விதத்திலும் இரண்டு வித்தியாசங்களை காட்டியிருப்பார்.

அதாவது இளம் வயது வேலு நாயக்கரின் உடல் மொழி வேறு மாதிரியாக இருக்கும், அதே போல் வயதான வேலு நாயக்கரின் உடல் மொழி வேறு மாதிரியாக இருக்கும். இந்த நிலையில் பிரபல நடிகரான எம்.எஸ்.பாஸ்கர் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், வயதான வேலு நாயக்கர் கதாபாத்திரத்தை குறித்த சீக்ரெட்டை பகிர்ந்துகொண்டார்.

- Advertisement -

அதாவது திமுகவை சேர்ந்த பேராசிரியர் கே.அன்பழகனின் உடல் மொழியைத்தான் வயதான வேலு நாயக்கரின் கதாபாத்திரத்திற்கு இன்ஸ்பிரேஷனாக எடுத்துக்கொண்டாராம் கமல்ஹாசன். இதனை ஒரு நாள் கண்டுபிடித்து கமல்ஹாசனிடமே கூறினாராம் எம்.எஸ்.பாஸ்கர். அதனை கேட்டதும் “எப்படிங்க கரெக்ட்டா கண்டுபிடிச்சீங்க” என்று கமல்ஹாசன் வியந்துப்போனாராம்.

- Advertisement -

சற்று முன்