- Advertisement -
Homeபொழுதுபோக்குபல தடைகளை கடந்து விஜய் நடத்தும் தமிழக வெற்றிக் கழகத்தில் முதல் அரசியல் மாநாடு -...

பல தடைகளை கடந்து விஜய் நடத்தும் தமிழக வெற்றிக் கழகத்தில் முதல் அரசியல் மாநாடு – வரும் 27ம் தேதி களை கட்டுமா? அவர் வந்து சொதப்பி விடுவாரா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வர போகிறார் என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்டவர் நடிகர் ரஜினிகாந்த் தான். பாட்ஷா படம் வெளியான 1994 முதலே அடுத்த முதல்வர் ரஜினிகாந்த் தான் என ரசிகர்கள் கோஷம் எழுப்ப ஆரம்பித்து விட்டனர். ஆனால் நான் அரசியலுக்கு வருவது என் கையில் இல்லை, ஆண்டவன் சொன்னால் வருவேன், காலம் என்ன சொல்கிறதோ அதைச் செய்வேன் என்று பதில் தந்தார் ரஜினிகாந்த்.

நேற்று நான் கண்டக்டர், இன்று நான் நடிகர், நாளை நான் யாரோ என்பதை காலம்தான் முடிவு செய்யும் என்றெல்லாம் நடிகர் ரஜினிகாந்த் பஞ்ச் டயலாக் பேசி காலத்தையும், அவர் நடித்த படங்களையும் ஓட்டினாரே தவிர அரசியலுக்கு கடைசி வரை வரவே இல்லை.

- Advertisement -

ஆனால் திடீரென மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் அரசியல் கட்சியை ஆரம்பித்து நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசியல் களத்தில் குதித்து விட்டார். ஆனால் சினிமாவில் பல சாதனைகளை செய்து, ஒரு தன்னிகரில்லாத திரைக் கலைஞனாக தன்னை வெளிப்படுத்திய நடிகர் கமல்ஹாசன், அரசியல் களத்தில் ஒரு பரிதாபத்துக்குரிய அரசியல் தலைவராக தான் மக்களால் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்.

ஆரம்பத்தில் திமுகவை எதிர்த்து அரசியல் செய்ய வந்த நடிகர் கமல்ஹாசன், இப்போது அதே திமுகவில் தஞ்சம் அடைந்து அவர்களுக்கு ஜால்ரா போட்டுக் கொண்டிருக்கிறார் என்பதுதான் தமிழ் சினிமா ரசிகர்களின் வேதனையாக இருக்கிறது. ஆனால் ரஜினி கமல் போல் இல்லாமல் அதிரடியாக அரசியல் களத்தில் இறங்கி இருக்கிறார் நடிகர் விஜய். கட்சி கொடியை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

ஒரு படத்துக்கு 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் அளவுக்கு தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்தும் சினிமாவுக்கு டாட்டா சொல்லிவிட்டு அவர் அரசியல் களத்தில் குதித்து இருப்பதே மிகப்பெரிய வரவேற்பை தமிழக மக்கள் மத்தியில் பெற்றுத் தந்திருக்கிறது. அதிமுக திமுக என்ற இரண்டு திராவிட கட்சிகள் தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்த நிலையில், மக்களின் வளர்ச்சி, தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது பெரிய அளவில் இல்லை என்பது தான் ஒட்டுமொத்த அதிருப்தியாக இருந்து வருகிறது. அதனால் அதிமுக, திமுக அல்லாத ஒரு புதிய அரசியலை எதிர்கொள்ள தமிழக மக்கள் தயாராகி வருகின்றனர்.

இந்த சூழலில் இப்போது நடிகர் விஜய் தமிழக அரசியல் களத்தில் குதித்து இருப்பது தமிழக மக்கள் மத்தியில் புதிய நம்பிக்கை ஏற்படுத்தி இருக்கிறது. வருகிற 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் அரசியல் மாநாடு நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. 1.5 லட்சம் பேர் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் கடந்த 10 நாட்களாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில், மாநாடு நடக்கப் போகிற நாளில் மழை பெய்யுமா, வருண பகவான் குறுக்கிட்டு இடையூறு ஏற்பட்டால், மாநாட்டில் பாதிப்பு ஏற்படுமா என்பதுதான் தமிழக வெற்றிக்கழகம் கட்சியினரின் கவலையாக இருந்து வருகிறது.

- Advertisement -

சற்று முன்