- Advertisement -
Homeபொழுதுபோக்குசூப்பர் ஸ்டார் ரஜினிக்கு போட்டியாக இந்த நடிகரா? - கடைசியில் இயக்குனர் சுந்தர் சி இப்படி...

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு போட்டியாக இந்த நடிகரா? – கடைசியில் இயக்குனர் சுந்தர் சி இப்படி ஒரு முடிவுக்கு வந்துட்டாரே?

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான படம் கூலி. இப்போது 75 வயதில் சூப்பர் ஸ்டார் பிஸியாக நடித்துக் கொண்டு இருக்கிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் தற்போது அவர் நடித்து முடித்திருக்கிறார். கடந்த 31ம் தேதி தான் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

இதை தொடர்ந்து வருகிற ஏப்ரல் மாதம் தலைவர் 173 என்ற படத்தின் ஷூட்டிங்கில் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க திட்டமிட்டுள்ளார். இந்த படத்தை நடிகர் கமல்ஹாசன் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் சொந்தமாக தயாரிக்கிறார். மேலும் இந்த படத்தில் நாயகியாக சாய்பல்லவி நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

- Advertisement -

இதற்கிடையே இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் தான் தலைவர் 173 படம் உருவாக இருந்தது. கமல் நடித்த அன்பே சிவம் படத்தையும் ரஜினி நடித்த அருணாசலம் படத்தையும் இயக்கியவர் சுந்தர் சி என்பதால் தலைவர் 173 படம் குறித்தும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் திடீரென இந்த படத்தில் இருந்து விலகுவதாக சுந்தர் சி அறிவித்து விட்டார்.

இது ரஜினி கமல் இருதரப்பு ரசிகர்களுக்கும் பலத்த ஏமாற்றத்தை தந்து விட்டது. அதன்பிறகு தலைவர் 173 படத்தை டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி டைரக்ட் செய்ய கமிட் செய்யப்பட்டார். இப்போது நடிகர் விஷால் நடிக்கும் புருஷன் என்ற படத்தை சுந்தர் சி டைரக்ட் செய்கிறார். இந்த படத்தில் தமன்னா கதாநாயகியாக நடிக்கிறார்.

- Advertisement -

சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் பிரமோ டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு குறும்படம் போல இந்த டிரெய்லர் அசத்தலாக இருந்தது. இந்நிலையில் புருஷன் படம் ஷூட்டிங் இம்மாதம் 4வது வாரத்தில் துவங்கப்பட உள்ளது.

ஜெயிலர் 2 படம் ரிலீஸ் ஆகும் அதே நாளில் புருஷன் படத்தையும் ரிலீஸ் செய்ய இயக்குனர் சுந்தர் சி திட்டமிட்டுள்ளார். ரஜினிக்கு போட்டியாக விஷால் படம் வருகிறதா என ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர். ஏற்கனவே ரஜினி நடிக்கும் படத்தை இயக்க மறுத்து வெளியேறிய சுந்தர் சி இப்போதைக்கு தனது படத்தை ரஜினி படம் ரிலீஸ் நாளில் வெளியிட முடிவு செய்தது ஏன் என்றும் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்