- Advertisement -
Homeபொழுதுபோக்குவெங்கட்பிரபு செய்த அந்த தரமான சம்பவம், விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தவா, அஜீத்தை கடுப்பேத்தவா - இதுல...

வெங்கட்பிரபு செய்த அந்த தரமான சம்பவம், விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தவா, அஜீத்தை கடுப்பேத்தவா – இதுல இப்படி ஒரு சீக்ரட் மேட்டர் இருக்கா?

- Advertisement -

நடிகர் விஜய் நடிப்பில் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் வெங்கட்பிரபு. கடந்த அக்டோபர் 2ம் தேதி துவங்கிய இந்த படப்பிடிப்பு. இம்மாதம் 31ம் தேதியுடன் நிறைவடைகிறது. சில தினங்களில் ரஷ்யா சென்று கிளைமாக்ஸ் காட்சிகளை படம்பிடிக்க உள்ளனர். தொடர்ந்து அடுத்த மாதத்தில் போஸ்ட் புரடக்சன் பணிகள் துவங்க உள்ளன.

முதலில் நடிகராக தான் தன் சினிமா பயணத்தை துவங்கினார் கங்கை அமரன் மகன் வெங்கட்பிரபு. ஏப்ரல் மாதத்தில், சிவகாசி உள்ளிட்ட சில படங்களில் நடித்த வெங்கட்பிரபு, நடிப்பில் பெரிதாக சாதிக்க முடியாது என்பதை உணர்ந்து, இயக்குனராக மாறினார். அவர் முதல் படமான சென்னை 28 மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

- Advertisement -

அதைத்தொடர்ந்து சரோஜா, மங்காத்தா, மாசு என்கிற மாசிலாமணி, சென்னை 28 படத்தின் 2ம் பாகம், கோவா, மாநாடு உள்ளிட்ட படங்களை வெங்கட்பிரபு இயக்கினார். இதில் அஜீத்குமார் நடித்த மங்காத்தா, மாநாடு போன்ற படங்கள் பெரிய அளவில் பேசப்பட்ட படங்களாக வெங்கட்பிரபுவுக்கு அமைந்தன. மற்ற படங்கள் சராசரியாக வெற்றியை பெற்றன.

இந்நிலையில், லியோ படத்தை தொடர்ந்து த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் என்ற விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு வெங்கட்பிரபுவுக்கு அமைந்தது. ஆனால், மங்காத்தா படம் பெரிய வெற்றி அடைந்த நிலையில், மீண்டும் தன்னை படம் பண்ண அஜீத்குமார் அழைப்பார் என வெங்கட்பிரபு எதிர்பார்த்தார். ஆனால் அஜீத்குமார், வெங்கட்பிரபுவை அழைக்கவே இல்லை. வெங்கட்பிரபு அழைத்தாலும், அஜீத்குமார் அவரது போனை எடுப்பது இல்லை.

- Advertisement -

இதற்கு காரணம், மங்காத்தா படத்தில் தன்னை விட, நடிகர் அர்ஜூனுக்கு கிளைமாக்ஸில் அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. படம் வெளியான பிறகுதான் அஜீத்குமாருக்கு தெரிய வந்தது. இதனால் கடுப்பான அஜீத்குமார், வெங்கட்பிரபுவை புறக்கணித்து வருகிறார். இதனால், கோட் படத்தை அஜீத்குமாரே வியக்கும் அளவுக்கு மிக சிறப்பாக தந்து, அஜீத்குமாரின் அடுத்த படத்தை வெங்கட்பிரபு இயக்க, அவரே அழைக்க வேண்டும் என இருக்கிறார் வெங்கட்பிரபு.

இப்போது அஜீத்குமார் அவரது 62வது படமான விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து அவரது 63 படம், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இந்த படத்தின் பெயர் குட் பேட் அக்லி என வைக்கப்பட்டு, சோஷியல் மீடியாவில் அது வைரலானது. இதையடுத்து வெங்கட்பிரபு, மிக விரைவில் கோட், அது மதிப்பாக இருக்கும் என, வெங்கட்பிரபு கோட் அப்டேட் தர அதுவும் வைரலானது. விவரம் அறிந்தவர்கள், இது விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தவா, அல்லது அஜீத்தை கடுப்பபேற்றவா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்