ஏஜிஎஸ் என்டர்டெயின்ட்மென்ட் பட நிறுவனம் தயாரிக்கும் கோட் படத்தை வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் (கோட்) என்ற இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். மீனாட்சி சவுத்ரி, சிநேகா, ரம்யா கிருஷ்ணனன், பிரசாந்த், பிரபு தேவா, மைக் மோகன், விடிவி கணேஷ், சுதீப், கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
சென்னையில் கோட் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், சமீபத்தில் படத்தின் இயக்குநர் வெங்கட்பிரபுவும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் விமானத்தில் பயணிக்கும்போது எடுத்த புகைப்படம் வைரலானது. கோட் படத்தின் 2 பாடல்களை லண்டனில் உள்ள ஒலிப்பதிவு கூடத்தில் ரெக்கார்டு செய்ய அவர்கள் சென்றதாக தெரிய வந்துள்ளது.
அதாவது கோட் படப்பிடிப்பில் செட் ஒர்க் நடந்து வருவதால், அந்த நேரத்தில் படத்தின் பாடல் காட்சிகளுக்காக வெங்கட்பிரபு, இசையமைப்பாளருடன் லண்டன் வரை செல்வது ஆச்சரியத்தை தந்துள்ளது. ஏனெனில் அவர் இவ்வளவு ரிஸ்க் எடுத்து படம் இயக்கும் டைரக்டராக இதுவரை இருந்தது இல்லை. அவரது படப்பிடிப்பே ஜாலியான ஒரு பிக்னிக் மாதிரி இருக்கும்.
ஆனால் கோட் படத்தை பொருத்த வரை ஆரம்பம் முதலே, மிகவும் சின்சியராக இரவு பகல் பார்க்காமல் ஹார்ட் ஒர்க் செய்து வருகிறார். கோட் படத்தை மிகப்பெரிய அளவில், மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் தீவிர முனைப்பில் இருக்கிறார். நடிகர் விஜயை காட்டிலும், கோட் படத்தின் மெகா வெற்றியில் மிக தீவிரமாக இருக்கிறார்.
இதற்கு முக்கிய காரணம் நடிகர் அஜீத்குமார் என்று இப்போது தெரிய வந்துள்ளது. ஏனெனில் மங்காத்தா படம் கொடுத்த பிறகு வெங்கட்பிரபுவை அஜீத் கண்டுகொள்வதே இல்லை. வெங்கட்பிரபு போன் செய்தாலும் அஜீத்குமார் எடுப்பதே இல்லை. இதற்கும் மங்காத்தா, அஜீத்குமாருக்கு வெற்றிப்படமாக தான் இருந்தது.
இப்படி தன்னை மதிக்காத அஜீத்குமாரை, விஜயை வைத்து வெற்றிப்படம் ஒன்றை கொடுத்துவிட்டு சந்திக்க வேண்டும் என்ற முனைப்பில்தான் இந்த அளவுக்கு கடுமையான உழைப்பையும், தீவிரத்தையும் காட்டி கோட் படத்தை இயக்கி வருகிறார் வெங்கட்பிரபு. இவர்களது இந்த மோதலில் படம் சிறப்பாக வந்தால் அதில் அதிகம் பயன்பெறப் போவது நடிகர் விஜய் என்பதும் இதில் கவனிக்கத்தக்கது.





