பருத்திவீரன் திரைப்படம் தொடர்பாக இயக்குனர் அமீர் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசிய விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இருவருக்கும் இடையே ஏற்கனவே இருக்கும் பஞ்சாயத்து, நீதிமன்றத்தில் இருக்க, ஞானவேல் ராஜா தற்போது கூறி இருப்பதைக் கண்டு பலரும் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும் அமீருக்கு ஆதரவாக இயக்குனர் சசிகுமார், சமுத்திரக்கனி ஆகியோர் பேசியுள்ளனர்.
இதனிடையே சமீபத்தில் பேட்டி அளித்த ஞானவேல் ராஜா, அமீரை இழிவு படுத்தியது மட்டுமல்லாமல் அதற்கு சுதா கொங்கராவையும் கூட்டு சேர்த்தார். இது தொடர்பாக பேசிய அவர், அந்த சமயம் ராம் திரைப்படம் ரிலீஸ் ஆகி இருந்தது. படம் ரிலீஸ் ஆகி 25 நாட்கள் ஆன நிலையில், அந்த திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்று கார்த்தி என்னிடம் கூறினார். அப்போது அவரும் சுதா கொங்கராவும், மணிரத்னத்துடன் பணிபுரிந்து வந்தனர்.
ஆல்பர்ட் தியேட்டரில் பாக்ஸ் பொருத்தி நான், சுதா, கார்த்தி அனைவரும் ராம் திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தோம். படத்தைப் பார்த்துவிட்டு சுதா, மேக்கிங்கும் வரவில்லை ஒன்றும் வரவில்லை என்று கமெண்ட் அடித்தார். கார்த்திக்கு 50 சதவீத நம்பிக்கை இருந்தது என்று பேசியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
அதேசமயம் தேவை இல்லாமல் சுதாவை ஏன் இவர் இருந்தார் என்றும் பலரும் இணையத்தில் கேள்வி எழுப்பி வந்தனர். இப்படியான சூழலில் இயக்குனர் அமீருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சுதா கொங்கரா எக்ஸ் வலைத்தளத்தில் ஒரு தகவலை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
பிப்ரவரி 2, 2016, இயக்குனர் அமீர் அண்ணாவிடமிருந்து எனக்கு ஒரு போன் வந்தது. நான் பிரசாத் ஸ்டுடியோவிற்கு வெளியில் வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன். எனக்கு அது நன்றாக நியாபகம் இருக்கிறது, ஏன் என்றால், இறுதி சுற்று படத்திற்காக எனக்கு முதல் முதலாக திரையுலகில் இருந்து போன் செய்து பாராட்டிய சிலரில் அவரும் ஒருவர். நான் ஒரே ஒரு விஷயம்தான் அவரிடம் சொன்னேன்.
என் படத்தில் வந்த மதியின் கதாப்பாத்திரம் முத்தழகின் பாதிப்புதான் என்று. ஒரு ஆணின் எழுத்துக்களில் ஒரு பெண் கதாப்பாத்திரம் இவ்வளவு முழுமையாக எழுதப்பட்டது அதுவே முதல் முறை என்றும் அவரிடம் சொன்னேன். நான் என் நான் என் படத்தில் மதி மற்றும் பொம்மி கதாபாத்திரங்களில் நடித்த நடிகைகளிடம் பருத்தி வீரன் படத்தை பார்த்துவிட்டு வருமாரு தான் சொல்லி அனுப்பினேன். அதுதான் தமிழ் சினிமாவில் தடம் பதித்த மிகச்சிறந்த ஓர் இயக்குனருக்கு நான் செய்யும் மரியாதை. இதுதான் நான் சொல்ல விரும்பும் விஷயம். நன்றி என்று கூறி இருக்கிறார்.





