- Advertisement -
Homeபொழுதுபோக்குபல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த வெங்கட் பிரபுவின் திரைப்படம் வெளியாகிறதா... அது என்ன படம் என்று...

பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த வெங்கட் பிரபுவின் திரைப்படம் வெளியாகிறதா… அது என்ன படம் என்று தெரியுமா… ஆச்சரியத்தில் தமிழ் ரசிகர்கள்…

- Advertisement -

வெங்கட் பிரபு இயக்கத்தில் அண்மையில் வெளியான கோட் திரைப்படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. தந்தை மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து விஜய் கலக்கி இருக்கிறார். ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இந்த திரைப்படம், 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

 

- Advertisement -

இது ஒரு பக்கம் இருக்க, படத்தின் மீதான விமர்சனங்களும் எழுந்து உள்ளன. குறிப்பாக வெங்கட் பிரபு, சொன்னதை செய்யவில்லை என்று விஜய் ரசிகர்களே புலம்புகின்றனர். சில காட்சிகளில் தொய்வு இருந்ததால், தாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு படம் இல்லை என்ற பேச்சுக்களும் எழுந்துள்ளன.

 

- Advertisement -

அதே சமயம் விஜய் படம் என்றாலே திரையரங்குகளுக்கு படையெடுக்கும் ஆடியன்ஸ்கள் இந்த திரைப்படத்தையும் விட்டு வைக்கவில்லை. குடும்பம் குடும்பமாக திரையரங்குகளுக்கு அவர்கள் செல்வதால் படத்தின் வசூல் நாளுக்கு நாள் எகிறி வருகிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் வெங்கட்பிரபு காட்டிய சுவாரசியம் நன்றாக இருப்பதாக அவர்கள் கூறி வருகின்றனர்.

 

இப்படியான சூழலில் வெங்கட் பிரபு இயக்கத்தில் எடுக்கப்பட்ட பார்ட்டி திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 2017 ஆம் ஆண்டு இதற்கான படப்பிடிப்பு எடுக்கப்பட்டு விட்டது. முழுக்க முழுக்க பிஜி தீவுகளில் இந்த திரைப்படத்திற்கான சூட்டிங் நடைபெற்றது.

 

இதில் சத்யராஜ், ஜெயராம், ஜெய், ஷ்யாம், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ், நாசர், சந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்தனர். இதன் டீசரும் 2017 ஆம் ஆண்டு இறுதியில் வெளியாகி வரவேற்பு பெற்றது. அதில் பிரதமர் மோடி பண மதிப்பிழப்பு செய்த அறிவிப்பு தொடர்பான காட்சியும் இடம்பெற்று இருந்தது.

 

இந்த நிலையில் பிஜி தீவுகளில் இருந்து படத்திற்கான முக்கியமான சான்றிதழ் ஒன்று கிடைப்பதில் தாமதமாகி வந்ததால் பார்ட்டி திரைப்படம் கிடப்பில் போடப்பட்டது. இப்படியான சூழலில் அதற்கான சான்றிதழ் விரைவில் வர இருப்பதாக தயாரிப்பாளர் டி சிவா தெரிவித்திருக்கிறார். இதனால் இம்மாத டிசம்பர் இறுதியில், பார்ட்டி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

- Advertisement -

சற்று முன்