- Advertisement -
Homeபொழுதுபோக்குசிம்புவை வைத்து டைம் லூப் ஜானரை கச்சிதமாக முடித்த வெங்கட் பிரபு... தளபதியுடன் எந்த கான்செப்ட்டை...

சிம்புவை வைத்து டைம் லூப் ஜானரை கச்சிதமாக முடித்த வெங்கட் பிரபு… தளபதியுடன் எந்த கான்செப்ட்டை கையில் எடுக்கிறார் தெரியுமா?….

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிக ஜாலியாகவும் பக்கா என்டர்டைன்மென்ட் படங்களையும் எடுப்பவர் வெங்கட் பிரபு. ஆரம்பத்தில் திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர், சென்னை 600028 திரைப்படத்தின் மூலம் இயக்குனராக புது ரூட்டில் நுழைந்தார்.

அந்த திரைப்படம் வெங்கட் பிரபு எதிர்பார்த்ததை விட மிகப் பெரிய வெற்றியை பெற்றது. சென்னை மாநகரில் வாழும் இளைஞர்களின் காதல் மோதல் சண்டை அன்பு பிரிவு பாசம் என அத்தனையும் விஷயங்களையும் ஒரே நேர்கோட்டில் கதையை சொல்லி சபாஷ் போட வைத்தார் வெங்கட் பிரபு.

பிறகு க்ரைம் திரில்லர் பாணியில் சரோஜா, அதற்கு அடுத்து மிகவும் ஜாலியாக கோவா என அடுத்தடுத்து படங்களை கொடுத்து அசர வைத்த வெங்கட் பிரபு, அஜித் குமாரை வைத்து மங்காத்தாவை இயக்கினார். அஜித்தின் 50-வது திரைப்படமாக உருவான இது, பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது.

பிறகு சூர்யாவுடன் மாஸ் என்கிற மாசிலாமணி, கார்த்தியுடன் பிரியாணி, சென்னை 600028 படத்தின் இரண்டாம் பாகம் என பிசியாக இருந்த இயக்குனர், சிம்புவை வைத்து மாநாடு படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தார். கொரோனா காலகட்டத்திற்கு பிறகு திரையரங்குகளில் பெரிய அளவுக்கு கூட்டம் சேராத நிலையில், இந்தத் திரைப்படம் வெளியாகி திரையரங்கு உரிமையாளர்களுக்கு புத்துணர்ச்சியை கொடுத்தது.

ஒரு மாநாடு, அதில் முதலமைச்சரை கொல்ல துடிக்கும் ஒரு கும்பல், இதனை முன்கூட்டியே தெரியவரும் ஹீரோ எப்படி தடுக்கிறார் என்பதை டைம் லூப் கான்செப்டில் எந்தவித குழப்பமும் இல்லாமல் கொடுத்து பாராட்டைப் பெற்றார் வெங்கட் பிரபு. இந்த நிலையில் தற்போது அவர் தளபதி விஜய் உடன் இணைந்து இருக்கிறார். இதில் சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா, பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், ஜெயராம் உள்ளிட்ட ஏராளமானோர் நடிக்கின்றனர்.

இதற்கான முதல் பாடல் சமீபத்தில் படமாக்கப்பட்டது. படத்தில் விஜய் தந்தை – மகன் என இரண்டு கேரக்டர்களில் நடிக்கிறாராம். இதற்கான பட பூஜை சமீபத்தில் நடைபெற்ற நிலையில் அந்த வீடியோ இன்று வெளியானது. இந்த நிலையில் தளபதி 68 திரைப்படத்திலிருந்து புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது டைம் டிராவல் கான்செப்ட் மையமாக வைத்துதான் இந்த திரைப்படம் எடுக்கப்படுகிறதாம். ஏ ஐ என்னும் புதிய தொழில்நுட்பத்தில் இதனை எடுக்க வெங்கட் பிரபு திட்டமிட்டு இருக்கிறாராம். ஏற்கனவே டைம் லூப் ஜானரில் கலக்கிய அவர், நிச்சயம் இதில் வெளுத்து வாங்குவார் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

சற்று முன்