இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த படங்கள் பொல்லாதவன் ஆடுகளம் வடசென்னை மற்றும் அசுரன். இந்த 4 படங்களும் பெரிய வெற்றியை பெற்றன. இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் மற்றும் ராஜன் வகையறா ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன.
இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் தமிழ் முருகன் என்ற டைட்டிலில் புதிய படம் உருவாகிறது என்ற அறிவிப்பு வெளியானது. மேலும் இந்த படம் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக உருவாகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இப்போது நடிகர் தனுஷ் நடித்து வரும் படங்களை முடித்த பிறகு 2027ம் ஆண்டில் இந்த படம் துவங்க உள்ளது. அதற்குள் இயக்குனர் வெற்றிமாறனும் ஏற்கனவே கமிட் ஆன படங்களை இயக்கி முடித்த பிறகு தமிழ் முருகன் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்றும் சொல்லப்பட்டது. முருகப் பெருமானின் வாழ்க்கை வரலாறை மையப்படுத்திய ஒரு படமாக இது இருக்கும் என்றும் தகவல் வெளியானது.
ஆனால் இப்போதைய தகவலின்படி தமிழ் முருகன் படம் அறிவிக்கப்பட்டதுடன் சரி, கண்டிப்பாக இந்த படம் உருவாகாது. அறிவிப்புடன் தமிழ் முருகன் படம் டிராப் செய்யப்படுகிறது. இந்த படம் எதிர்காலத்தில் உருவாக வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது. தெலுங்கில் திரிவிக்ரம் இயக்கத்தில் தமிழ் கடவுள் முருகனை வடக்கில் பிறந்தவர் என்ற கோணத்தில் படம் தயாரிப்பாக ஒரு தகவல் வெளியானது.
தமிழ்நாட்டில் பிறந்த தமிழ் கடவுள் முருகனை வடக்கில் பிறந்ததாக சித்தரிக்கும் தெலுங்கு படத்துக்காக எதிராக தமிழில் ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்ற ஒரு எமோஷனில் இந்த தமிழ் முருகன் பட அறிவிப்பை இயக்குனர் வெற்றிமாறனும், நடிகர் தனுஷூம் அறிவித்தனர். ஆனால் இந்த படம் குறித்த முழுமையாக திட்டமிடல் அவர்களுக்கு இல்லை.
மேலும் தமிழ் முருகன் படத்தை தமிழை தவிர தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என பிற மொழிகளில் வெளியிட முடியாது. தமிழ் கடவுள் முருகனின் படம் தமிழில் மட்டுமே ஓடும். அதனால் ஓடிடி நிறுவனங்களும் இந்த படத்தை அதிக விலை கொடுத்து வாங்க முன்வர மாட்டார்கள். அதனால் தமிழ் முருகன் படம் வெறும் அறிவிப்புடன் கைவிடப்பட்டு விட்டது என மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு ஜெ பிஸ்மி ஒரு வீடியோவில் கூறியிருக்கிறார்.





