- Advertisement -
Homeபொழுதுபோக்குவாடிவாசல் படத்தில் இருந்து ஜிவி பிரகாஷ் நீக்கம்? அதுவும் இப்படி ஒரு காரணத்துக்காகவா?

வாடிவாசல் படத்தில் இருந்து ஜிவி பிரகாஷ் நீக்கம்? அதுவும் இப்படி ஒரு காரணத்துக்காகவா?

- Advertisement -

வெற்றிமாறன் “விடுதலை” இரண்டாம் பாகத்தை தற்போது உருவாக்கி வருகிறார். “விடுதலை” முதல் பாகத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இதுவரை காமெடியனாகவே பார்க்கப்பட்ட சூரி, “விடுதலை” திரைப்படத்தின் மூலம் கதாநாயகராக உருவெடுத்தார். பலரும் சூரியின் யதார்த்த நடிப்பை பார்த்து வியந்துபோனார்கள்.

“விடுதலை பாகம் 2” திரைப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் சூர்யாவை வைத்து “வாடிவாசல்” திரைப்படத்தை இயக்கவுள்ளார். இத்திரைப்படத்தின் டெஸ்ட் ஷூட் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நடந்தது. அதில் உண்மையான ஜல்லிக்கட்டு காளைகளை களமிறக்கி படமாக்கினார்கள். அந்த டெஸ்ட் ஷூட் வீடியோ கடந்த வருடம் வெளிவந்திருந்தது.

இதனை தொடர்ந்து “வாடிவாசல்” திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெற்றிமாறன் தற்போது “விடுதலை” படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருவதால் “வாடிவாசல்” திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

“வாடிவாசல்” திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான அந்தணன், “வாடிவாசல்” திரைப்படத்தில் ஜிவி பிரகாஷிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஒரு தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.

அதாவது ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரான அமித்ஷா சமீபத்தில் சென்னை வந்திருந்தபோது, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் அமித்ஷாவை சென்று சந்தித்தார். அவரிடம் ஜிவி பிரகாஷ் குமார், தமிழர் நலன் குறித்து பல விஷயங்களை பேசியதாக தெரிய வந்தது.

வெற்றிமாறன் அண்ணா, பெரியார் ஆகியோரின் சித்தாந்தங்களின் மீது மதிப்பு வைத்திருப்பவர் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிந்திருப்பார்கள். இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் குமார் அமித்ஷாவை சந்தித்த செய்தி வெற்றிமாறனின் மனதில் உறுத்தலை ஏற்படுத்தியதாம். ஆதலால் “வாடிவாசல்” திரைப்படத்தில் இருந்து ஜிவி பிரகாஷை நீக்கிவிடலாமா? என்ற யோசனையில் வெற்றிமாறன் இருக்கிறாராம். இவ்வாறு ஒரு தகவலை பத்திரிக்கையாளர் அந்தணன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

சற்று முன்