- Advertisement -
Homeபொழுதுபோக்குவேட்டையன் படம் குறித்த இரண்டு லேட்டஸ்ட் அப்டேட் வந்தாச்சு, ஒண்ணு செகன்ட் சிங்கிள் வெளியீடு, மற்ற...

வேட்டையன் படம் குறித்த இரண்டு லேட்டஸ்ட் அப்டேட் வந்தாச்சு, ஒண்ணு செகன்ட் சிங்கிள் வெளியீடு, மற்ற ஒன்று…? – ரஜினி குட்டிக்கதை கேட்க ரெடியாகும் ரசிகர்கள்

- Advertisement -

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் மாஸ் ஹிட் கொடுத்த படம் ஜெயிலர். இன்னொரு பாட்ஷா என்று ரசிகர்கள் கூறும் அளவுக்கு இந்த படம் ரஜினிக்கு பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது. இந்த படத்தின் சூப்பர் ஹிட் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக உள்ள படம் வேட்டையன். வரும் அக்டோபர் 10ம் தேதி இந்த படம் ரிலீஸாகிறது.

இந்த படத்தில் ரஜினிகாந்துடன் மஞ்சு வாரியார், அமிதாப் பச்சன், ராணா டகுபதி, பகத் பாசில், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். என்கவுண்டர் விவகாரத்தை மையப்படுத்தி படமாக இதை இயக்குனர் தசெ ஞானவேல் டைரக்ட் செய்திருக்கிறார். கடந்த முறை ஜெய் பீம் என்ற படத்தில் லாக்கப் மரணங்களை மையப்படுத்தி படம் இயக்கி இருந்தார்.

- Advertisement -

நேற்று முன்தினம் வேட்டையன் படத்தில் இருந்து மனசிலாயோ என்ற பாடல் வெளியானது. இந்த பாடலை, ஏஐ தொழில் நுட்பத்தில் மறைந்த மலேசியா வாசுதேவன் குரலில் இசையமைப்பாளர் அனிருத் உருவாக்கி இருந்தார். அருணாசலம் படத்தில் சிங்கம் ஒன்று புறப்பட்டதே பாடலை கடைசியாக மலேசியா வாசுதேவன் ரஜினிக்காக பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி 1980, 1990களில் வெளிவந்த பல ரஜினி படங்களில் நிறைய பாடல்களை மலேசியா வாசுதேவன் பாடி இருக்கிறார். குறிப்பாக வேலைக்காரன், மனிதன், மாவீரன், படிக்காதவன், அதிசயபிறவி என பல படங்களில் ரஜினி பாடல்களுக்கு மலேசியா வாசுதேவன் குரல் கொடுத்துள்ளார். இப்போது அவர் மறைந்து பல ஆண்டுகளான பிறகும் ஏஐ தொழில்நுட்பத்தில் அவரது குரலில் ரஜினி பாடல் வெளிவந்துள்ளது.

- Advertisement -

வரும் அக்டோபர் 10ம் தேதி வேட்டையன் படம் ரிலீஸ் ஆகிறது. சமீபத்தில் இந்த படத்தில் டப்பிங்கில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், சில காட்சிகளை அப்போது பார்த்துவிட்டு இயக்குனர் தசெ ஞானவேலை அருகில் அழைத்து பாராட்டி இருக்கிறார். என்கவுண்டர் விவகாரத்தை மையப்படுத்திய இந்த படத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக நடித்திருக்கிறார் ரஜினிகாந்த்.

முதல் சிங்கிள் மனசிலாயோ நேற்று முன்தினம் வெளியான நிலையில், வரும் 15ம் தேதி வேட்டையன் படத்தில் இருந்து 2வது சிங்கிள் வெளியாக உள்ளது. தொடர்ந்து வருகிற அக்டோபர் 2ம் தேதி, வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கிறது. இந்த விழாவில் பங்கேற்க ரஜினி ஒப்புதல் அளித்துள்ள நிலையில், விழா ஏற்பாடுகளை மிக பிரமாண்டமாக லைகா புரடக்சன்ஸ் செய்து வருகிறது. இந்த முறையும் ரஜினி குட்டிக்கதை சொல்வாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்