- Advertisement -
Homeபொழுதுபோக்குவிடுதலை படத்தில் யாரும் எதிர்பார்க்காத ஒரு திட்டத்தை வைத்திருக்கும் வெற்றிமாறன்... அடக்கடவுளே... இப்படியே போயிட்டு இருந்தா...

விடுதலை படத்தில் யாரும் எதிர்பார்க்காத ஒரு திட்டத்தை வைத்திருக்கும் வெற்றிமாறன்… அடக்கடவுளே… இப்படியே போயிட்டு இருந்தா எப்படி… இதுக்கு ஒரு முடிவு இல்லையா…

- Advertisement -

பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் உள்ளிட்ட திரைப்படங்களை எடுத்தவர் வெற்றிமாறன். இதில் அசுரன் திரைப்படத்திற்கு பிறகு, அவர் சூர்யாவை வைத்து வாடிவாசல் திரைப்படத்தை எடுப்பதாக அறிவித்தார். இதனை கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பதாக தெரிவிக்கப்பட்டது.

 

- Advertisement -

சி சு செல்லப்பா எழுதிய ஜல்லிக்கட்டு என்னும் குறுநாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதற்காக, காளைகளுடன் சூர்யா பயிற்சியும் ஏற்பட்டார். வெளிநாடுகளில் இது தொடர்பான அனிமேஷன் பணிகளும் தொடங்கின. இந்த நிலையில் சூர்யா சில படங்களில் கமிட்டாகி இருந்ததால், வாடிவாசல் படத்திற்கான படப்பிடிப்பு தாமதமானது.

 

- Advertisement -

இந்த சிறு இடைவெளியில் விடுதலை படத்தை எடுப்பதற்காக சென்றார் வெற்றிமாறன். மிகவும் குறுகிய பட்ஜெட்டில் இந்தப் படத்தை எடுக்க திட்டமிட்டு இருந்தார் இயக்குனர். இதுவும் ஒரு நாவலை அடிப்படையாகக் கொண்டுதான் எடுக்கப்பட்டது.

 

சூரி, விஜய் சேதுபதி என இரண்டு கதாபாத்திரங்களை வைத்து வெறும் ஐம்பதே நாட்களுக்குள் இந்த படத்தை முடிக்க வெற்றிமாறன் திட்டமிட்டு இருந்தார். ஆனால் படத்தின் மீதான ஆர்வமும் அதன் உள்ளார்ந்த கதைகளும் சென்று கொண்டே இருந்ததால், இரண்டு பாகங்களாக எடுக்க வெற்றிமாறன் திட்டமிட்டார். அதன்படி இதன் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியானது.

 

அதில் சூரியின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. விஜய் சேதுபதி இரண்டு மூன்று காட்சிகளிலேயே வந்தார். இப்படியான சூழலில் தான் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தை வெற்றிமாறன் எடுத்து வருகிறார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து வருகிறார். எஸ் ஜே சூர்யாவும் படத்தில் இடம்பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் தற்போது விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தின் இறுதி கட்டப் பணிகளில் வெற்றிமாறன் ஈடுபட்டு வருகிறார். ஆனால் தற்போது வரையே நான்கு மணி நேரம் 30 நிமிடங்கள் காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் நீளம் மிகவும் அதிகரித்திருப்பதால், இதனை மூன்று பாகங்களாக வெளியிட வெற்றிமாறன் தற்போது யோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்படி என்றால் அதற்கும் சேர்த்து இயக்குனர் சூட்டிங் செய்வாரோ என்று பயத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்