- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடுத்தடுத்து இரண்டு அப்டேட்களை அள்ளி வீசிய வெற்றிமாறன்... போடு டன்டனக்கா... போடு டன்டனக்கா...

அடுத்தடுத்து இரண்டு அப்டேட்களை அள்ளி வீசிய வெற்றிமாறன்… போடு டன்டனக்கா… போடு டன்டனக்கா…

- Advertisement -

வெற்றிமாறன் இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம். அவர் இயக்கிய திரைப்படங்களிலேயே சுமாரான விமர்சனத்தை பெற்றது இதுதான். பிரச்சார நெடி அதிகமாக இருந்ததும், முதல் பாதி நீளமான காட்சிகள் இடம் பெற்றதும்தான் இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றதற்கு காரணம். இருப்பினும் படத்தில், அரசியல் சார்ந்த வசனங்களை மிக கூர்மையாக வைத்திருந்தார் வெற்றிமாறன்.

இந்த திரைப்படத்திற்கு முன்னதாகவே அவர் வாடிவாசல் திரைப்படத்தை இயக்க இருப்பதாக இருந்தது. அசுரன் திரைப்படத்தை முடித்த கையோடு அந்தத் திட்டத்தில்தான் வெற்றிமாறன் இருந்தார். ஆனால் அதற்கான பிரீ ப்ரொடக்சன் பணிகளில் தாமதம் ஏற்பட்டதால் விடுதலை திரைப்படத்தை எடுக்கச் சென்று விட்டார். ஆனால் அந்த திரைப்படமே, இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டு விட்டது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன், வாடிவாசல் திரைப்படத்தையே இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவும் உறுதியாக இருந்தார். ஆனால் அந்தப் பணியில் மீண்டும் தாமதம் ஏற்பட்டது. இப்படியான சூழலில் யாருமே எதிர்பார்க்காத வகையில், சிம்புவுடன் வெற்றிமாறன் இணைந்தார்.

இதற்கான ப்ரோமோ சூட்டிங் நடைபெற அந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. அப்போது வட சென்னை திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தைதான் வெற்றிமாறன் இயக்கப் போவதாக பலரும் கூறினார்கள். இதனை வீடியோ வாயிலாக தெளிவுபடுத்தினார் வெற்றிமாறன். அதில் வட சென்னை படத்தின் இரண்டாம் பாகம் என்பது நிச்சயம் தனுசை வைத்துதான் எடுப்பேன் என்று அவர் கூறியிருந்தார்.

- Advertisement -

சிம்புவை வைத்து எடுக்கப் போகும் திரைப்படத்தில், வடசென்னை திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் இடம் பெறுவார்கள் என்று அவர் விளக்கி இருந்தார். சொல்லப்போனால் இது வடசென்னை உலகத்தில் நடைபெறும் ஒரு கதை என்று கூறியிருந்தார் வெற்றிமாறன். மேலும் என் ஓ சி தொடர்பாக எந்த பிரச்சனையும் எழவில்லை என்றும், தனுஷ் அதற்கு அனுமதி கொடுத்ததாகவும் பேசி இருந்தார். இருப்பினும் வெற்றிமாறன் – சிம்பு திரைப்படத்தின் அறிவிப்பு வீடியோ இன்னும் வெளியாகவே இல்லை.

பலரும் இந்த திரைப்படம் கைவிடப்பட்டு விட்டதாகவே கூறியிருந்தார்கள். இப்படியான சூழலில் தனது தயாரிப்பில் உருவாகி இருக்கும் பேட் கேர்ள் திரைப்படத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார் வெற்றிமாறன். அப்போது பேசிய அவர் இன்னும் 10 – 15 நாட்களில் சிம்பு படத்தின் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று கூறியிருந்தார். இதனை முடித்துவிட்டு வடசென்னை திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை தனுசை வைத்து எடுக்க இருப்பதாகவும் வெற்றிமாறன் தெரிவித்தார்.

- Advertisement -

சற்று முன்