- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜீத்குமாரை அசிங்கப்படுத்திய இயக்குனர் மகிழ் திருமேனி - விடாமுயற்சி படம் குறித்து வெளிப்படையாக விமர்சித்த...

அஜீத்குமாரை அசிங்கப்படுத்திய இயக்குனர் மகிழ் திருமேனி – விடாமுயற்சி படம் குறித்து வெளிப்படையாக விமர்சித்த பிரபலம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக ரசிகர்களால் கொண்டாடப்படுவர் நடிகர் அஜீத்குமார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அவரது நடிப்பில் துணிவு படம் வெளியானது. அதன்பிறகு 2 ஆண்டுகள் கழித்து ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் விடாமுயற்சி படம் ரிலீஸாகி உள்ளது.

இதில் அஜீத்குமாருடன் திரிஷா ரெஜினா கசாண்ட்ரா அர்ஜூன் ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் பல கட்ட போராட்டங்களுக்கு பிறகுதான் இன்று ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதித்த நிலையில், காலை 9 மணிக்கு தமிழ்நாட்டில் விடாமுயற்சி ரிலீஸ் செய்யப்பட்டது.

- Advertisement -

விடாமுயற்சி படம் குறித்து விமர்சனம் செய்து மூத்த சினிமா பத்திரிகையாளர்கள் ஜெ பிஸ்மி மற்றும் அந்தணன் ஆகியோர் கூறியதாவது, தமிழ் சினிமாவில் மிகப் பெரிய இடத்தில் ரசிகர்களின் புகழ்பெற்ற நடிகராக இருப்பவர் அஜீத்குமார். அவர் இந்தளவுக்கு கீழே இறங்கி தனது இமேஜை விட்டுக்கொடுத்து இப்படி ஒரு படத்தில் நடித்திருக்க வேண்டுமா என்ற கேள்வியை இந்த படம் எழுப்புகிறது.

படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் எந்த விஷயங்களும் இல்லாமல் அதற்கு நேர்மாறான ஒரு படமாக உள்ளது. குறிப்பாக மாஸ் ஹீரோ அஜீத் போன்ற உச்ச நடிகர் நடிக்கும்போது அவருக்கான சில காட்சிகள், அவரது லட்சக்கணக்கான ரசிகர்கள் விரும்பும் காட்சிகள் படத்தில் சில இடங்களிலாவது இருக்க வேண்டும். ஆனால் அஜீத் இமேஜை டேமேஜ் பண்ணும் காட்சிகளே படத்தில் அதிகமாக இருக்கின்றன.

- Advertisement -

வில்லன்களிடம் அஜீத்குமார் கெஞ்சுவதும் அவர்கள் அவரை இழிவாக நடத்துவதும் தாறுமாறாக அடிப்பதும் என சில காட்சிகளில் அஜீத்குமார் போன்ற ஒரு ஹீரோவை இப்படி காட்டியிருக்கிறார் மகிழ் திருமேனி. கதை திரைக்கதை என எந்த விஷயத்திலும் படம் ரசிகர்களுக்கு திருப்தி தர வாய்ப்பில்லை. திரிஷா அர்ஜூன் வரும் காட்சிகள் கூட நன்றாக உள்ளது. அனிருத் பின்னணி இசை, சில பாடல்கள் பாராட்ட வைத்திருக்கிறது.

மற்றபடி தடம் தடையற தாக்க போன்ற சுவாரசியமான படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கிய படம்தானா என சந்தேகப்படும் அளவுக்கு விடாமுயற்சி படம் இருக்கிறது. உண்மையில் இந்த படத்தை எதிர்பார்த்து செல்லும் ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியாக தான் இருக்கும். அஜீத் போன்ற ஒரு மாஸ் நடிகரை இப்படி நடிக்க செய்திருப்பது, ஏற்கனவே கஷ்டத்தில் இருக்கும் லைகா நிறுவனத்துக்கு விடாமுயற்சி படம் எந்தளவுக்கு பாதிப்பை தரும் என்பதை சொல்லவே வேண்டியதில்லை. நடிகர் அட்டக்கத்தி தினேஷ் கூட மாறுபட்டு நடிக்கும் பட்சத்தில் அஜீத்குமாரை இப்படி நடிக்க செய்திருப்பது ரசிகர்களால் ஏற்க முடியாதது, என்று அவர்கள் ஒரு வீடியோவில் பேசியிருக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்