- Advertisement -
Homeபொழுதுபோக்குஏகே ரசிகர்கள் என்றால் சும்மாவா? 2 ஆண்டுகளுக்கு பின் திரைக்கு வரும் விடாமுயற்சி படத்தின் ப்ரீ...

ஏகே ரசிகர்கள் என்றால் சும்மாவா? 2 ஆண்டுகளுக்கு பின் திரைக்கு வரும் விடாமுயற்சி படத்தின் ப்ரீ புக்கிங் நிலவரம் – இப்பவே கண்ணை கட்டுதே…

- Advertisement -

நடிகர் அஜீத் குமார் நடிப்பில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு வருகிற 6ம் தேதி விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆகிறது. லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான விடாமுயற்சி படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் அஜீத்குமாருக்கு ஜோடியாக திரிஷா நாயகியாக நடித்திருக்கிறார்.

மேலும் வில்லன் கேரக்டரில் அர்ஜூன் ஆரவ் ரெஜினா கசாண்ட்ரா சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் படத்தில் நடித்துள்ளனர். பிரேக் டவுன் என்ற ஹாலிவுட் படத்தின் ரீமேக் தான் விடாமுயற்சி படம் என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

கடந்த பொங்கல் பண்டிகைக்கு இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வருகிற 6ம் தேதிக்கு ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டு இப்போது படம் வெளியாகிறது. ஆனால் இப்போது வேறு எந்த முக்கிய நடிகர்களின் படங்களும் ரிலீஸ் இல்லை என்பதால் தமிழ்நாடு முழுவதும் அஜீத்குமார் படம் அதிக திரையரங்குகளில் வெளியாகும் வாய்ப்புள்ளது.

இன்னும் படம் ரிலீசாக 3 நாட்களே உள்ள நிலையில் விடாமுயற்சி படத்துக்கான பிரமோஷன் நிகழ்ச்சி வேகமாக நடந்து வருகிறது. படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி தொடர்ந்து நேர்காணல்களில் பங்கேற்று படம் குறித்த பல விஷயங்களை தொடர்ந்து பேசி வருகிறார். அஜீத்குமார் நடிப்பில் இது ஒரு வித்யாசமான அனுபவத்தை ரசிகர்களுக்கு தரும் என்றும் கூறி வருகிறார்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் விடாமுயற்சி படத்திற்கான ப்ரீ புக்கிங் முன்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் முதல் நாளில் பெரும்பாலான காட்சிகள் ஹவுஸ்புல் காட்சிகளாக நிரம்பி விட்டன. இப்போது 2ம் நாளிலும் தொடர்ந்து ப்ரீ புக்கிங் முன்பதிவு வேகமாக நடந்து வருகிறது.

தமிழ்நாட்டில் விடாமுயற்சி திரைப்படம் 1000 திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் முன்பதிவு இதுவரை 2.69 கோடிக்கு நடந்துள்ளது. அதேபோல் வெளிநாடுகளில் ப்ரீ புக்கிங் மூலம் 3.5 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இன்னும் 3 நாட்கள் இருப்பதால் விடாமுயற்சி படம் முன்பதிவிலேயே ரூ. 25 கோடியை வசூலித்து விடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் அஜீத்குமார் நடித்த முந்தைய படங்களை விட விடாமுயற்சி படம் மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று முன்