- Advertisement -
Homeபொழுதுபோக்குவிடாமுயற்சி படம் பிப்ரவரி 6ம் தேதி ரிலீஸ்; நெருக்கடி தந்த 2 நிறுவனங்களுக்கு நன்றி சொல்லும்...

விடாமுயற்சி படம் பிப்ரவரி 6ம் தேதி ரிலீஸ்; நெருக்கடி தந்த 2 நிறுவனங்களுக்கு நன்றி சொல்லும் ஏகே ரசிகர்கள் – அடக் கடவுளே!

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் நடித்த விடாமுயற்சி படம் வருகிற பிப்ரவரி 6ம் தேதி வெளியாகிறது. இதை படக்குழுவே சில தினங்களுக்கு முன் டிரெய்லர் வெளியிட்டு உறுதி செய்து விட்டது. 2 ஆண்டுகளுக்கு பின் அஜீத்குமார் நடித்த விடாமுயற்சி படம் ரிலீஸாவது அவரது ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.

இந்த படத்தின் டிரெய்லரை பார்த்த ஏகே ரசிகர்கள் அப்படியே ஆச்சரியத்தில் உறைந்து போயுள்ளனர். ஹாலிவுட் படம் போல அதில் வரும் காட்சிகளும், அதிரடி சண்டை காட்சிகளும் அஜீத்குமாரின் நடிப்பும் நிச்சயமாக இந்த படம் பெரிய அளவில் வரவேற்பை பெறும் என்ற உறுதியான நம்பிக்கையை தந்துள்ளது.

- Advertisement -

இதற்கிடையே பொங்கலுக்கு வெளியாக இருந்த விடாமுயற்சி படம் திடீரென தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது. மார்ச் மாதம்தான் இந்த படம் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், பிப்ரவரி 6ம் தேதியே விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்க 2 நிறுவனங்கள்தான் முக்கிய காரணம் என்று தெரிய வந்துள்ளது.

விடாமுயற்சி படத்தின் டிஜிட்டல் உரிமையை, நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் ரூ. 130 கோடிக்கு வாங்கியுள்ளது. இந்த படத்தை பிப்ரவரி மாதம் 6ம் தேதி நீங்கள் ரிலீஸ் செய்யாவிட்டால் இந்த படத்தை வாங்க மாட்டோம். அப்படியே வாங்கினாலும் விலையை குறைத்து விடுவோம் என்று கூறி எச்சரித்துள்ளது.

- Advertisement -

அதே போல் விடாமுயற்சி படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி நெட்வொர்க் வாங்கியுள்ளது. அந்த நிறுவனமும் வருகிற ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டுக்கு நாங்கள் விடாமுயற்சி படத்தை தான் திரையிட திட்டமிட்டுள்ளோம். அதனால் படம் ரிலீஸான 60 நாட்களுக்கு பிறகுதான் சாட்டிலைட்டில் படத்தை திரையிட முடியும். அதனால் பிப்ரவரி 6 ரிலீஸ் மாறக் கூடாது என நெருக்கடி தந்துள்ளது.

இப்படி டிஜிட்டல் உரிமம் பெற்ற நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஒருபுறம், சாட்டிலைட் உரிமம் பெற்ற சன் டிவி நெட்ஒர்க் நிறுவனம் ஒருபுறம் என இரண்டு பக்கமும் நெருக்கடி தந்ததால்தான் விடாமுயற்சி படம் பிப்ரவரி 6 என்பதை லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் உறுதி செய்தது. இல்லை என்றால் இன்னும் மார்ச் அல்லது மே ஜூன் என ரிலீஸ் தள்ளிப் போயிருக்கும். அதனால் நெருக்கடி தந்த அந்த 2 நிறுவனங்களுக்கு அஜீத் ரசிகர்கள் நன்றி சொல்லி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்