- Advertisement -
Homeபொழுதுபோக்குவிடாமுயற்சியை, விடாமல் துரத்தும் சோதனைகள், ஜூன் மாத படப்பிடிப்புக்கு தயாரான டைரக்டர் மகிழ்திருமேனி - ஆனா...

விடாமுயற்சியை, விடாமல் துரத்தும் சோதனைகள், ஜூன் மாத படப்பிடிப்புக்கு தயாரான டைரக்டர் மகிழ்திருமேனி – ஆனா இப்படி ஒரு சிக்கல் வந்துடுச்சே?

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம், துணிவு. கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி, இந்த படம் வெளியானது. இந்த படம் வெளியான போது விஜய் நடித்த வாரிசு படமும் வெளியானது. அதற்கு பின்பு விஜய் நடித்த லியோ படம் வெளியானது. இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் கோட் படமும் ரிலீஸ்க்கு தயாராகி விட்டது.

ஆனால் அஜீத்குமார் நடிப்பில் இதுவரை ஒன்றரை ஆண்டுகளாக ஒருபடம் கூட வெளிவரவில்லை. கடந்தாண்டு அக்டோபரில் துவங்கிய விடாமுயற்சி படப்பிடிப்பும், 4 மாதங்கள் அஜர்பைஜானில் நடந்த நிலையில், அதுவும் பாதியில் நின்று போனது. படத்தை தயாரித்து வரும் லைகா புரடக்சன்ஸ் நிதி சிக்கல் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

- Advertisement -

இதையடுத்து சென்னை திரும்பிய விடாமுயற்சி படக்குழு, மீண்டும் ஓரிரு முறை அஜர்பைஜான் சென்று படப்பிடிப்பை நடத்த முயற்சித்தது. ஆனால் நினைத்தபடி காட்சிகளை படமாக்க இயற்கை சூழல் ஒத்துழைப்பு தரவில்லை. கனமழை, மணல் புயல், கடும் குளிர் என பாதிப்புகள் தொடர்ந்தது. இதற்கிடையே ஆரவ்வுடன் அஜீத் ஓட்டிய ஜீப், விபத்துக்குளானது வீடியோவாக வந்து பெரிய அளவில் வைரலானது.

இப்போது அஜீத்குமார், தனது அடுத்தபடமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி படத்துக்கு தயாராகி விட்டார். கடந்த 9,10ம் தேதிகளில் ஐதராபாத்தில் ஷூட்டிங்கையும் நடத்தி முடித்தனர். தேர்தல் காரணமாக சிறு இடைவெளி விட்டு இப்போது தொடர்ந்து ஷூட்டிங் நடந்து வருகிறது. லேட்டஸ்ட் ஆக அந்த படத்தில் அஜீத்குமார் பர்ஸ்ட் சிங்கிள் போஸ்டர் வெளியாகி வைரலானது.

- Advertisement -

குட் பேட் அக்லி படத்தின் பர்ஸ்ட் ஷெட்யூலை முடித்துவிட்டு, வரும் ஜூன் மாத இறுதியில் விடாமுயற்சி ஷூட்டிங்கில் அஜீத்குமார் பங்கேற்க உள்ளார். ஒரே ஷெட்யூலில் படத்தின் அனைத்து காட்சிகளையும் முடித்துவிட திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக டைரக்டர் திருமேனி, ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ் இருவரும் லொக்கேஷன் பார்க்க அஜர்பைஜான் சென்றுள்ளனர்.

விடாமுயற்சி படம், மல்ட்டி ஸ்டார்ஸ் படமாக உள்ளது. இதில் அஜீத்குமாருடன் அர்ஜூன், ஆரவ், திரிஷா என பலரும் நடிக்கின்றனர். இதில் திரிஷா தொடர்ந்து படப்பிடிப்புகளில் பிஸியாக இருந்து வருகிறார். அர்ஜூனும் பல படங்களில் கமிட் ஆகி உள்ளார். இதில் அனைத்து ஆர்ட்டிஸ்ட்களும் பங்கேற்க வேண்டிய காட்சிகளும் நிறைய உள்ளதால், குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் அனைத்து நடிகர்களையும் ஓரிடத்தில் ஒன்றுகூடச் செய்து நடிக்க வைக்க முடியுமா, என்ற பெரிய சிக்கல் எழுந்துள்ளது. அதை சமாளித்தால்தான் விடாமுயற்சி படம் முழுமையடையும்.

- Advertisement -

சற்று முன்