- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னது... விடாமுயற்சியில் இத்தனை கேரக்டர்களில் அஜித் வருகிறாரா... மகிழ் திருமேனியால் மகிழ்ச்சியில் ஏகே ரசிகர்கள்...

என்னது… விடாமுயற்சியில் இத்தனை கேரக்டர்களில் அஜித் வருகிறாரா… மகிழ் திருமேனியால் மகிழ்ச்சியில் ஏகே ரசிகர்கள்…

- Advertisement -

துணிவு திரைப்படத்தை தொடர்ந்து அஜித்குமார் அடுத்ததாக நடிக்கும் திரைப்படம் விடா முயற்சி. துணிவு படத்தின் சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு வெளியானது. லைக்கா நிறுவனம் இதனை தயாரிக்க, விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே தயாரிப்பு நிறுவனத்துக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் அதன் ப்ராஜெக்டில் இருந்து விலகினார் இயக்குனர். இதன் பிறகு அஜித்தை யார் இயக்கப் போகிறார்கள் என்ற கேள்வி கோலிவுட்டில் எழ, அஜித் பிறந்தநாளான மே ஒன்றாம் தேதி லைக்கா நிறுவனம் அதற்கு பதில் அளித்தது.

அதன்படி, மகிழ் திருமேனி அஜித் பட இயக்குனராக அறிவிக்கப்பட்டார். இதற்கு விடாமுயற்சி என்றும் பெயரிடப்பட்டது. தடையறத் தாக்க, தடம், மீகாமன் என கிரைம் திரில்லர் படங்களை எடுப்பதில் கெட்டிக்காரரான மகிழ் திருமேனி, அஜித்துடன் இணைந்ததால் எதிர்பார்ப்பு எகிறியது.

இதனைத் தொடர்ந்து படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் அது குறித்த சத்தமே வெளிவரவில்லை. மே மாதத்தை கடந்து ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் வரையிலும் பட குழு மவுனம் காத்ததால், அஜித் ரசிகர்கள் விரக்தி அடைந்தனர். இது நடுவே விடா முயற்சி கைவிடப்பட்டதாகவும் ஒரு பேச்சு எழுந்தது.

ஆனால் அதை திட்டவட்டமாக மறுத்த தயாரிப்பு நிறுவனம், விடாமுயற்சி வீண்முயற்சி ஆகாது என்று தெளிவுபடுத்தியது. சமீப காலமாக பைக் டூர் செல்வதில் ஆர்வம் காட்டி வரும் அஜித், வெளிநாடுகளில் ரெக்கை கட்டி பறப்பதாலேயே படக்குழுவுக்கு இந்த நிலைமை என்பது தெரிய வந்தது. தற்போது ஒரு வழியாக அஜித் பைக்கை ஓரங்கட்ட, அஜர்பைஜான் நாட்டில் சூட்டிங் தொடங்கியுள்ளது.

இதில் த்ரிஷா, ரெஜினா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். வில்லன்களாக சஞ்சய் தத்தும், பிக் பாஸ் புகழ் ஆரவ்வும் நடிக்கின்றனர். இதற்கான படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதில் அஜித் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறாராம். நடுத்தர வயதில் வரும் அஜித்திற்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறாராம். இதேபோல் இளமை தோற்றத்தில் வரும் அஜித்திற்கு ஜோடியாக ரெஜினா வருகிறாராம். கிரைம் திரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டு வரும் இந்த திரைப்படம், அடுத்த ஆண்டு வெளியாகிறது.

சற்று முன்